மாணவர்கள் ,முதியவர்கள் மத்தியில் கண் நோய்

பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியவர்கள் மத்தியில் கண் நோய் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

நோய் வராமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண் வலி, கண்களைத் திறப்பதில் சிரமம், மங்கலான பார்வை மற்றும் வெளிச்சத்தைப் பார்ப்பதில் சிரமம் ஆகியவை இதன் அறிகுறிகளாக காணப்படுகிறது.
இநத நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண்ணில் சுரக்கும் நீர் ஆரோக்கிமானர் தொடுவதன் மூலம் இந் நோய் ஏனையோருக்கு பரவுகிறது.
இதன் காரமமாக பாடசாலை மாணவர்கள் விசேட கவனத்துடன் செயல்படவேண்டும் என்று பொது சுகாதார பரீசோதகர் திரு ரோசான் குமார தெரிவித்தார்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவரின் முகத்தைத் தொடுவதை எப்போதும் தவிர்க்க வேண்டும்.கண்கள் அல்லது முகத்தைத் தொட்டால் கைகளைக் சவர்க்காரத்தை பயன்படுத்தி கழுவி சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். இதன் மூலம் நோய் பரவுவதை கட்டுப்படுத் முடியும் என்றும் அவர் தெரிவித்தார்..

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன