1,000 கி.மீ தூரம் நடந்த இலங்கையருக்கு அவூஸ்திரேலியா PR

நிரந்தரக் குடியுரிமையை வலியுறுத்தி  ஆயிரம் கிலோமீற்றர் நடை பயணத்தில் ஈடுபட்ட  இலங்கையர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இலக்கை  அடையும் தருணத்தில் சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த போது   கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக குடிவரவு தொடர்பான விடயங்களை கையாளும் வழக்கறிஞரால் அறிவிக்கப்பட்டதாக www.abc.net.au  என்ற இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

நீல் பாரா (Neil Para) என்பவர் இந்த நடைபவணியை  ஆகஸ்ட் 1 ஆம் திகதி  விக்டோரியாவின் ‎Ballarat இல் இருந்து ஆரம்பித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக தனது குடும்பத்தினருடன் பிரிட்ஜிங் விசாவில் வாழ்ந்து வரும் திரு பாரா, பிரிட்ஜிங் விசாவில் சிக்கித் தவிக்கும் அகதிகளுக்கு “நியாயமான தீர்வை” வழங்குமாறு அவூஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese அந்தோனி அல்பனீஸை வலியுறுத்துவதற்காக நடைப்பயணத்தை மேற்கொண்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன