தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழகத்தில் லண்டன்-சென்னை இடையிலான நேரடி விமான சேவை கடந்த ஒரு வார காலமாக நிறுத்தப்பட்டிருப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். லண்டனிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர் லைன்ஸ் நிறுவனம் நேரடி விமான சேவை வழங்கி வருகிறது.
அதனுடன் லண்டனிலிருந்து ரோம், பாரிஸ், நியூயார்க் உள்ளிட்ட இடங்களுக்கு இணைப்பு விமானங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் இந்த சேவையை பலரும் பயன்படுத்திவந்தனர். கடந்த வாரம் இந்த விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் சென்னையிலிருந்து லண்டன் செல்லும் பயணிகள் துபாய், கத்தார், அபுதாபி பிரான்ஸ்போர்ட் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிலையத்தில் சர்வரில் (Server) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தற்போதைய நிலைக்கு காரணம் என்று அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை விரைந்து சரி செய்யும் பணி நடைபெறுவதாகவும் அடுத்த ஓரிரு தினங்கலில் தொழில்நுட்பக்கோளாறு சரிசெய்யப்பட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.