முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் அவதூறு பரப்பும் வகையிலும்இ நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் மேற்கொண்ட வார்த்தை பிரயோகத்தை கண்டித்து இன்று (25) சட்டத்தரணிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கில் சில இடங்களில் சட்டத்தரணிகள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாகவும் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட சில் இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் இடமபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்;;;னர் ‘ எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சிறப்புரிமையை பயன்படுத்தி நீதித்துறையை அவமதிக்கும் விதத்தில் அல்லது விமர்சிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது’ என்ற கோரிக்கையை மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் முன் வைத்தனர். மேலும் இவ்வாறான அவதூறு ஏற்படுத்தும் கருத்துக்கள் இடம் பெற்றால் அதனை ஹன்சாட்டில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.