இரண்டு வாரங்களுக்குள் மாகாண மட்டத்தில் புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மாகாண மட்டத்தில் புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்
தற்போது நிலவும் பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
ஓய்வுபெற்ற மற்றும் சேவையை விட்டு விலகிய ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு 02 வருடங்களுக்கு ஆசிரியர்களை மீள் இணைத்துக்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
இதற்கமைவாக ஓய்வு பெற்று சேவையில் இருந்து வெளியேறிய ஆசிரியர்களால் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 5,400 கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள மாகாண சபைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாடுமுழுவதுமுள்ள பாடசாலைகளில் சுமார் 32,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் ஆங்கிலப் பாடங்களுக்கு 5400 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகவும்இ இதுவரை 700 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள மத்திய மாகாணம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எந்தவித சட்ட விதிமுறை ஒழுங்கு இன்றி நியமனம் செய்யப்பட்ட 52,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் சுமார் 22,000 பேர் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எதுவும் இல்லாமல் இப்படி இணைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு முறையான ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு நியமிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஒரு குழுவினர் நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவைப் பெற்று அந்த முடிவை நிறுத்தினர் என்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் மேலும் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன