ஹர்த்தாலுக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் அழைப்பு
வடக்கு கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு மன்னார் மாவட்ட வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மன்னார் மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இன்று (27); மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதை குழிக்கு நீதி கோரி இடம்பெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி மன்னார் மாவட்டத்தின் அனைத்து தரப்பினரையும் அழைத்து நிற்கின்றோம்.
3வது திருத்தச் சட்டம் தொடர்பான, ஓ.எம்.பி மற்றும் நீதி அமைச்சரின் நடவடிக்கைகள் குறித்து பல விடயங்களை முன் வைத்துள்ளனர் என்று மன்னார் மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா மேலும் தெரிவித்துள்ளார்.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன