பேலியகொட, வத்தளை, ஜால, கட்டுநாயக்க, சீதுவ மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (16) காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
சபுகஸ்கந்த மின்சார உப நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகம் இன்று எட்டரை மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்படுவதினால், நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
களனி ,வத்தளை ,பியகம ,மஹர ,தொம்பே, கட்டான மினுவாங்கொட உள்ளூராட்சி சபை பகுதிகள் மற்றும் கம்பஹா உள்ளூராட்சி சபையின் ஒரு பகுதியிலும் நீர்விநியோகம் இடைநிறுத்தப்படுவதாகவும் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது