எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க முடியாது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் மன்னார் மாவட்ட குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (7) காலை மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,பெற்றோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஐ.நா.சபையின் 53 வது கூட்டத்தொடர் இடம் பெற்று வருகிறது.எங்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும்.தொடர்ந்து இவ்வாறு போராட்டங்களை முன்னெடுக்க முடியாது என்று மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா இதன்போது தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன