சீனி வரி மோசடி மனுவை உயர் நீதிமன்றம் பரிசீலிக்க தீர்மானம்

கடந்த ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 1,590 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம் மனுவை தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் இன்று முதல் 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இன்று முதல் நான்கு வாரங்களுக்குள் திருத்தப்பட்ட பிரதிவாதிகள் பட்டியலை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.