எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையில் பஸ் கட்டண திருத்தம் செய்யப்படுமா இல்லையா என்பதை இன்று அறிவிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.