பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அவர் மீதான முதல் வழக்கு கடந்த 13ம் திகதியும் டாக்கா நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது அவ்வாறே கடந்த 29ம் திகதி (ஆகஸ்ட் ) ,100வது வழக்கு பங்களாதேஷ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது .
ஷேக் ஹசீனாவுக்கு கொலைக் குற்றச்சாட்டின் கீழ் 63 வழக்குகளும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் கீழ் 7 வழக்குகளும், கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் 3 வழக்குகளும், மேலும் 2 வழக்குகள் மற்ற கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
அரச தொழில் ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, கடந்த 5ம் திகதி ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார். அதன் பின்னர் பொறுப்பேற்ற டாக்டர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஷேக் ஹசீனாவின் இராஜதந்திர கடவுச்சீட்டை இரத்து செய்ததன் மூலம் அவர் இந்தியாவில் தங்கி இருப்பதற்கான சட்டபூர்வமான தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது