தலதா மாளிகையில் திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்.

பௌத்தவர்களின் புனித தளமான தலதா மாளிகையில் திருமணம் செய்து கொண்ட தம்பதியரின் புகைப்படம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இத் தம்பதியினர் தலதா மாளிகையில் உள்ள ஹெவிசி மண்டபம், அம்பராவ உள்ளிட்ட இடங்களில் புகைப்படங்களை எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர் .

தலதா மாளிகையில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்ற தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தியவதன நிலம பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தம்பதியினரையும் புகைப்படக் கலைஞர்களையும் இன்றைய தினம் கண்டிக்கு வரவழைத்து அவர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.