பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்தவர்கள் புதிய கூட்டணி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து ஜனாதிபதிக்கு ஆதரவினை வழங்குகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் புதிய கூட்டணி எதிர்வரும் 5ஆம் திகதி அமைக்கப்படவுள்ளது என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று (29) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் புதிய கூட்டணியை அறிவிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,
கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் தினேஷ் குணவர்தனவும், செயலாளராக அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்படவுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏனைய உறுப்பினர்களுக்கான பதவிகள் வழங்கி வைக்கப்படுவதோடு, இந்த புதிய கூட்டணி எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.