பரா ஒலிம்பிகில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்

பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை சமித்த துலான் கொடிதுவக்கு உலக சாதனையுடன் வென்றெடுத்தார்.

போட்டியின் ஆறாம் நாளான நேற்று (02) இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமான ஆண்களுக்கான F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய இலங்கை மாற்றுத்திறனாளி சமித்த துலான் கொடிதுவக்கு ஈட்டியை 67.03 மீற்றர் தூரத்திற்கு எறிந்து F44 வகைப்படுத்தல் பிரிவுக்கான உலக சாதனையை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

மேலும் 2020 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் போட்டியில், எப் 44 பிரிவில் சமித்த துலான் வெண்கல பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது