எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளரை முன்னிறுத்தும் எனவும், அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்யொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்
ஜனாதிபதித் தேர்தல் அவசியம் நடத்தப்பட வேண்டும் எனவும் அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே தேர்தலை பிற்போட முயற்சித்தால் நாட்டில் ஆயிரக் கணக்கானோரின் இரத்தங்கள் சிந்தப்படலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.