பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தாலும் அவர்களின் சொந்த பாதுகாப்புக்காக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் செலுத்தி இரண்டு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமை குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி,பாராளுமன்ற உறுப்பினர்கள் தனது பதவியை இழந்த பின்னர் அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளன.
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அதிகரித்த வன்முறைகள் காரணமாக இந் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.