கொவிட்டில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்குத் தீர்வு – ஜனாதிபதி

கொவிட் காலத்தில் ஜனாஸா எரிப்பில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க.
நேற்று (31) இரவு காத்தான்குடியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட போதே தெரிவித்தார் .

இங்கு தொடர்ந்து பேசிய ஜனாதிபதி ,

இந்த நாட்டில் முஸ்லிம்களின் பல பிரச்சினைகளை நான் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றேன். நவாஸ் ஆணைக்ககுழுவின் அறிக்யை நடைமுறைப்படுத்துவேன்.
அது மாத்திரமல்ல கொவிட் காலத்தில் முஸ்லிம்களது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படாது எரிக்கப்பட்டன எனவே இப்பொழுது நாம் அதற்கு தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்காக அமைச்சர் அலிஸப்ரி தலைமையில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள இருக்கின்றோம். அத்திருத்தத்தில் எந்தவொரு மதத்தினரது பூதஉடலை அவர்களது உறவுகள் விருப்பப்படி அடக்கம் செய்ய, எரிக்க அல்லது தான தர்மம் செய்ய முடியும் என்பது உள்ளடக்கப்படும் .

அத்துடன் நாங்கள் கொவிட் காலத்தில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்குவோம்.

நாட்டியில் இனவாத, மதவாதப், பிரச்சினைகள் எவையும் நமக்குத் தேவையில்லை.” என மேலும் ஜனாதிபதி தெரித்தார்

இக்கூட்டத்தில் அமைச்சர் அலிஸப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான இ