தேர்தல் பிரச்சார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது அவ்வாறாக விளம்பரங்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு விளம்பரங்கள் அகற்றப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஸ்டிக்கர்கள் அல்லது சுவரொட்டிகளை அகற்றும் போது வாகனத்திற்கு சேதம் ஏற்படலாம் எனவே பொலிஸாரின் இவ்வாறான தலையீட்டைத் தவிர்க்க வாகன உரிமையாளர்கள் தாமாக முன்வந்து இந்த விளம்பரங்களை அகற்ற வேண்டும் என நிஹால் தல்துவ கேட்டுக் கொண்டார்.