ஸ்பெயினில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி அஹிம்சா நேற்று (08) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இலங்கை மல்யுத்த வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச போட்டி ஒன்றின் இலங்கைக்கு கிடைத்த முதலாவது பதக்கம் இதுவாகும்.
உலக மல்யுத்த சம்மேளனம் ஸ்பெயின் பொன்டெவெட்பா நகரில் ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியில் 100 நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர் .
ரஷ்ய வீராங்கனையுடன் போட்டியிட்டு 6-2 என்ற கணக்கில் அவரை தோற்கடித்து 53 கிலோ எடைப்பிரிவின் கீழ் வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
இப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற நெட்மி அஹிம்சா, கடந்த 8ஆம் திகதி 08.40 மணியளவில் Etihad Airlines இன் EY-396 இல் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.