எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு கிளிநொச்சி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு சந்திரகுமார் ஆகியோருக்கிடையில் இன்று(02) சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தனது ஆதரவை சஜித்துக்கு வழக்கப்போவதாக கூறினார்.
1994 – 2000 மற்றும் 2010 – 2015 ஆம் ஆண்டு காலகட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ள இவர், தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து, பாராளுமன்ற தெரிவுக் குழுக்களில் பிரதித் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.