கருணாரத்ன பரணவிதான பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

9 ஆவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான இன்று (03) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவின் வெற்றிடத்திற்கு கருணாரத்ன பரணவிதானவின் பெயர் கடந்த 28 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதற்கமைய அவர் இன்று பதவியேற்றுக்கொண்டார்

2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கருணாரத்ன பரணவிதான 36,787 வாக்குகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.