முலத்தீவு மாங்குளம், துணுக்காய் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அரச சார்பற்ற நிறுவனமொன்று ஈடுபட்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் அதே அமைப்பைச் சேர்ந்த 4 ஊழியர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
காயமடைந்த நால்வரும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக துணுக்காய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .