ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான மொத்த செலவினங்களின் மதிப்பீடு உடனடியாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் பிரிவு மட்டத்தில் எதிர்பார்க்கப்படும் செலவுகள் அடங்கிய அறிக்கைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை பொலிஸார் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்கு குறைந்தது இரண்டு அதிகாரிகளையாவது பொலிஸார் கடமையில் ஈடுபடுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.