உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கல்வி அமைச்சின் கீழ் கடமையாற்றும் சகல சேவைகளின் உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படும் சம்பளமற்ற விடுமுறை இரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பொது நிர்வாக சுற்றறிக்கைகள் 14/2022, 14/2022 (I), 14/2022 (II), 14/2022 (III), 14/2022 (IV) ஆகியவற்றின் பிரகாரம் சம்பளமில்லாத விடுமுறை வழங்கப்படுவதால் ஏற்பட்டுள்ள ஊழியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் , அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் அமைச்சின் விடுமுறையை பரிசீலிக்கும் குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம், எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் சம்பளமற்ற விடுமுறை விண்ணப்பங்களுக்கான அங்கீகாரம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.