பௌசிக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ. எச்.எம்.பௌசிக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (27) வழங்கியுள்ளார் .

ஏ. எச். எம் பௌசி குற்றத்தை எற்றுக்கொண்டதையடுத்து, குறித்த குற்றத்திற்காக அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

மேலும் 4 இலட்சம் அபராதம் செலுத்துமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது .

2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நெதர்லாந்தில் இருந்து வழங்கப்பட்ட Land Cruiser வாகனத்தை மோசடி செய்து அரசாங்கத்திற்கு 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல்செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏ. எச். எம் பௌசி தனது வழக்கறிஞர் மூலம் குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.

62 வருட அரசியல் அனுபவமுள்ள சிரேஷ்ட அரசியல்வாதியான பௌசி முதல் தடவையாக இலஞ்சம் வாங்கியதாக குற்றத்தை ஏற்றுக்கொண்டதையும், அவரது தற்போதைய வயதை கருத்தில் கொண்டு அவருக்கு இவ்வாறான தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதன்போது பௌசியின் கைரேகைகளைப் பெறவும் நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.