சட்டத்தரணி ஒருவருக்கு உயர்நீதிமன்றத்தால் தடை விதிக்கப்படுட்டுள்ளது .

தனக்கான கட்டணத்தை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாத சட்டத்தரணி சரத் ​​விஜேசிறி டி சில்வாவின் சட்டத் தொழிலை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது .

இரண்டு காணி வழக்குகளில் ஆஜராவதற்கு அவர் உரிய தரப்பிணரிடமிருந்து 44 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு முறையாக ஆஜராகவில்லை என உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் மூன்று மாதங்களுக்குள் மூன்று மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையை மனுதாரருக்கு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது