வெளிநாடு தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு அந்நியச் செலாவணி 2 பில்லியன் டொலர்

இவ்வருடத்தின் முதல் காலாண்டியில் மாத்திரம் , புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கி மூலம் 2.079 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர், குறிப்பாக அவர்கள் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 543.8 மில்லியன் டொலர்களை அனுப்பி வைத்துள்ளனர் .

கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் அந்நியச் செலாவணி 11.4 வீதத்தால் அதிகரித்துள்ளது அத்துடன் கடந்த வருட ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 19.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்கள் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரை 10,807 மில்லியன் அமெரிக்க டொலர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . அமைச்சர் அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் போது ​​புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் மாதாந்த அந்நியச் செலாவணித் தொகை 200 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்திருந்தது.

அப்போது நாட்டில் எரிபொருள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் நிலை ஏற்பட்டது.

அதன்படி எரிபொருள், எரிவாயு வரிசைகள் மற்றும் மருந்துப் பற்றாக்குறையை நீக்கி நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வங்கி முறை மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்ப 500 மில்லியன் டொலர்களின் பங்குதாரராக இருக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். அதன் படி முறையாக பணம் அனுப்ப ஊக்குவிக்கப்பட்டது.

நாட்டிற்கு சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமங்களை வழங்கல் , வீட்டுவசதி ,பல்நோக்கு கடன் முன்மொழிவுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக விமான நிலையத்தில் “ஹோப் கேட்” என்ற சிறப்பு வாயில் போற்றவைகள் விசேடமாக வழங்கப்பட்டுள்ளன

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!