19%ஆல் குறைந்த மது உற்பத்தி

2023ஆம் ஆண்டில் இலங்கையில் மது உற்பத்தி 19% ஆக குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதிகமாக விற்பனையாகும் 180 மில்லிலீடர்கொண்ட மதுபான போத்தல்களின் உற்பத்தி சுமார் 15 மில்லியனால் குறைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2022 ஆம் ஆண்டில் 750 மில்லிலீடர் கொண்ட மதுபான போத்தல்கள் 57.7 மில்லியன் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், 2023 இல் அது 39.5 மில்லியனாக குறைந்துள்ளது.

2022 இல் தயாரிக்கப்பட்ட 180 மில்லிலீடர் கொண்ட பாட்டில்களின் அளவு 105.8 மில்லியனாக இருந்தது, ஆனால் 2023 இல் அது 90.5 மில்லியனாகக் குறைந்துள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டில் மாத்திரம் 214 புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 147 F.L 7, 8 மற்றும் F.L 11 வகைகள் சுற்றுலாத்துறைக்காக வழங்கப்பட்டவை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கலால் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மொத்த மதுபான அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை 5730 என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சட்டரீதியான மதுபான கூடங்கள் ஸ்தாபிக்கப்படுவதனால் மது பாவனை அதிகரித்து வருவதாக கருத்து வெளியிடப்படுகின்ற போதிலும், சட்ட ரீதியாக மதுவிலக்கு இல்லாத பிரதேசங்களில் சட்டவிரோத மதுபானம் அதிகமாக காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, அவற்றைத் தடுத்து, இழந்த வரி வருமானத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதே செய்ய வேண்டும் என்றும் எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் மது பாவனையை ஊக்குவிக்காது என்றும் தெரிவித்த அமைச்சர், மதுபான அனுமதிப்பத்திர கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மதுபான போத்தல் ஒன்றின் விலையில் 75% வரியாக அறவிடப்படுவதாகவும், மதுபானத்திற்கு அதிக வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!