குளவி கொட்டுக்கு இலக்காகிய 100 மாணவர்கள்

தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிகல பேர்சி அபேவர்தன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 100 பாடசாலை மாணவர்கள் இன்று (30) பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அந்த மாணவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் , அவர்களில் 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக அம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

தற்போது ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் 70 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் , ஏனைய மாணவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

பாடசாலைக்கு அருகில் உள்ள மரத்தில் இருந்த குளவிகளே இவ்வாறு கொட்டியுள்ளது , மேலும் இச் சம்பவத்தில் பாடசாலையின் கல்வி சாரா ஊழியர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து மாணவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட்டு குளவிகளை விரட்டுவதற்காக வெளியில் தீ வைத்து எரித்துள்ளளனர்.