வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று ( 12 ) கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுதல், நிதி வழங்குதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன் போது மேலும் தெரிவித்தார்.