மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நான்கு புதிய நீதியரசர்களாக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த ஆர்.ஏ. ரணராஜா மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கொபல்லாவ ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) ஜனாதிபதி நியமித்துள்ளார்.
அரசியலமைப்பின் 107 ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.