பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எல்லையற்ற வருமானத்தை ஈட்டக்கூடிய வகையில் சம்பள உயர்வு

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எவ்வித வரம்பும் இன்றி எல்லையற்ற நாளாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர். பி. ஏ. விமலவீரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நாளாந்த குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 1350 ரூபாவாகவும், பறிக்கும் ஒவ்வொரு கிலோ தேயிலைக்கு 50 ரூபா மேலதிகமாக செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பர் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களால் பெறப்படும் ஒரு கிலோ இறப்பருக்கு மேலதிகமாக இந்த மேலதிக கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டும்.

அதன்படி, தொழிலாளியின் உற்பத்தித்திறனைப் பொறுத்து, நாளாந்தம் வரையரை இல்லாமல் சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன செலுத்துவதற்கான குறைந்தபட்ச சம்பளம் 1350 ரூபாவாகவும் அதிகரிக்கவுள்ளது.

இந்த சம்பள உயர்வு செப்டம்பர் 10ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.