இராஜாங்க அமைச்சர்கள் நாள்வரை பதவி நீக்கம் செய்துள்ளார்ஜனாதிபதி.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இராஜாங்க அமைச்சர்களான பிரேமலால் ஜயசேகர (துறைமுக மற்றும் விமான சேவைகள்), இந்திக்க அனுருத்த (மின்சக்தி மற்றும் எரிசக்தி),
மொஹான் பிரியதர்ஷன டி சில்வா (விவசாயம்) மற்றும் சிறிபால கம்லத் (நெடுஞ்சாலைகள்) ஆகியோர்கள் தமது பொறுப்புக்களில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசியலமைப்பின் 47(3)(அ) பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.