அமைச்சர் மனுஷாவிற்கு நுவரெலியாவில் சிறப்பான வரவேற்பு.

நுவரெலியா மாவட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அலுவலகம் அண்மையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. வேலை நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் மத்திய மற்றும் ஊவா மாகாண மக்கள் தமது சேவைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை இந்தப் புதிய அலுவலகத்தினால் வழங்க முடியும்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்காரவை உற்சாகமாக வரவேற்க நுவரெலியா மக்கள் தயாராகி இருந்தனர். இந்நிகழ்வில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஸ் உட்பட பல அதிதிகள் கலந்துகொண்டனர்.