ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின், முப்படைகளின் பிரதானி என்ற வகையில், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைகளின் பிரதானி என்ற வகையில் நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தேர்தல் வெற்றியை எதிர்பார்த்து அரசாங்கம் சதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என காலி, நெலுவாவில் இன்று (16) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டார் .

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

மக்கள் துன்பப்பட்ட யுகத்திற்கு மீண்டும் 21ஆம் திகதி நாம் திரும்பிச் செல்ல முடியாது,அந்த துன்பத்தை மீண்டும் அனுபவிக்க நாங்கள் விரும்பவில்லை, நாட்டை இன்னொரு மோதலை நோக்கி தள்ள வேண்டுமா? இரண்டரை வருடங்களுக்கு முன்னர் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை நினைவுகூர்ந்து எதிர்வரும் 21ஆம் திகதி தீர்க்கமான தீர்மானத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறையால் குழந்தைகள் அவதிப்படும்போதும், மக்கள் வரிசையில் நின்று இறக்கும்போதும் இந்த நாட்டு மக்கள் தலைவர்களிடம் உதவி கோரினர். அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிவர்த்தி செய்ய எந்தத் தலைவரும் முன்வரவில்லை, ஏனெனில் அவர்களால் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியவில்லை.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அன்று மக்கள் அனுபவித்த துன்பங்களை புரிந்து கொண்டார். மக்களின் நலனுக்காக அச்சமின்றி உசிதமான முடிவுகளை எடுத்தார். அவைகள் அரசியல் ரீதியாக ஆபத்தான முடிவுகளாகும் . நாங்கள் அரசியல் தற்கொலை செய்து கொள்கிறோம் என மக்களால் விமர்சிக்கப்பட்டோம்

ஆனால் நாங்கள் அந்த முடிவுகளை எமது மக்களுக்காக எடுத்தோம். இரண்டரை வருடங்களுக்குள் மக்களுக்கு எரிபொருள் மற்றும் எரிவாயுவை வழங்கி நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்தது. நமது மக்கள் அதை நினைவுகூருகிறார்கள், மேலும் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தங்கள் நன்றியைச் செலுத்த விரும்புகிறார்கள்.

எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளை ஜனாதிபதியே நிறைவு செய்தார் .தேவைப்படுபவர்களுக்கு உதவுவது தவறு என்றால், அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது தவறு என்றால், மக்கள் எங்களுக்கு எதிராக வாக்களிக்கலாம்.
ஆனால் எமது முயற்சியே இந்த நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது என்பதை புரிந்து கொண்ட மக்கள் அச்சமின்றி வாக்களிப்பார்கள்.

இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆபத்தில் இருப்பதை அறிவார்கள்.

நாளாந்தம் இந்த நாட்டைக் அதலபாதாள குழிக்குள் தள்ள ஒரு குழுவொன்று இயங்கி வருகின்றது

அக்குழுவினர் அபிவிருத்தி திட்டங்களை நிராகரித்து, நாட்டின் முன்னேற்றத்தை தங்கள் சொந்த நலன்களுக்கு அச்சுறுத்தலாக பார்க்கின்றனர்.

இவர்களால் மக்கள் மீண்டும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என தெரிகிறது. ஆனால், கடந்த காலங்களில் அவர்களின் வழியைப் பின்பற்றிய போது நாட்டுக்கு என்ன நடந்தது என்பதை மக்கள் அறிந்துகொண்டார்கள் . எனவே தற்போது மக்கள் அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய தீர்மானத்த்தை எடுப்பார்கள்.

இந்த தேர்தலில் வெற்றி பெற சதி செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் நாம் வைத்துள்ளோம்.

2 முதல் 2.5 மில்லியன் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் போலியான பேரணிகளை நடத்தும் சில குழுக்கள் வன்முறையைத் தூண்ட முயற்சிப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

தேர்தல் வன்முறைகள் எங்கு நடந்தாலும் தவறு. நபர் ஒருவர் NPP க்கு வாக்களிக்க மாட்டேன் என்று கூறியதற்காக ஹெல்மெட்டால் அடிக்கப்பட்டார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

கீதா குமாரசிங்க ஒரு நல்ல பெண். முன்னாள் ஜனாதிபதி மீது அவருக்கு மிகுந்த மரியாதை இருப்பதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அவர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக அனைத்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்தார்.