2025ஆம் ஆண்டு அரசாங்க சேவை சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு எவ்வித தடைகளும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார் .
பல வருடங்களாக இடம்பெற்ற சம்பள முரண்பாடு தொடர்பாக கண்டடிறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு 2024 மே 27ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக்கு முன்வைத்த 2024/20 யோசனைக்கு இணங்க, அக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கு 2024 ஆகஸ்ட் 12ஆம் திகதி அமைச்சரவை அனுமதி கிடைத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கமைய 25000ரூபா வரை வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை அதிகரித்தல், அடிப்படைச் சம்பளத்தை குறைந்தது 24% வீதத்தால் அதிகரித்தல், மருத்துவக் காப்புறுதி முறையை அறிமுகப்படுத்தல்
அத்துடன் வினைத்திறனாக அரச சேவையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான வாழ்க்கைச் செலவுப் படியின் அரைப்பகுதிக்குச் சமமான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ஓய்வூதியக்காரர்களுக்கும் வழங்குதல் போன்ற விடயங்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.
எனவே அதன்பிரகாரம் இச்சம்பள அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிடிய மேலும் குறிப்பிட்டார் .