தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு அனைத்துவிதமான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நாளை (11) நள்ளிரவு முதல் தடை விதித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாளை மாணவர்களுக்கு விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் .
மேலும் யாராவதொரு தனி நபர் அல்லது நிறுவனத்தினால் இவ்வுத்தரவு மீறப்படும் போது அருகில் உள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சை திணைக்களம் போன்றவற்றில் முறைப்பாடு செய்ய முடியும் எனபரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .