தேங்காய் எண்ணெய் மீதான அதிகாரம் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு

உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் பிற சமையல் எண்ணெய் பொருட்களுக்கான ஒழுங்குமுறை அதிகாரங்களை தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது .

இந்த அமைச்சரவைப் பத்திரத்தை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

நாட்டில் தற்போது வருடாந்தம் தேங்காய் எண்ணெய் நுகர்வு 240,000 மெற்றிக் தொன்களாகும். இதில் 40,000 மெற்றிக் தொன் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது எஞ்சியவை மாற்று எண்ணெயுடன் கலந்து தேங்காய் எண்ணெய் ஆக சந்தைக்கு வழங்கும் மோசடி வியாபாரம் இடம்பெற்று வருவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.