தேங்காய், கோப்பி மற்றும் மாம்பழ பெறுமதி சங்கிலியை வலுப்படுத்த பங்குடைமையாளராகும் SDB வங்கி மற்றும்அவுஸ்திரேலிய சந்தை அபிவிருத்தி வசதிகள் .

SDB வங்கியானது, வியாபார அபிவிருத்தியின் ஊடாக தேசிய அபிவிருத்தியை முன்னேற்றுவதிலான அதனதுதொடர்ச்சியான கவனத்துடன், அதனது தற்போதைய பெறுமதி சங்கிலி நிதியிடல் முயற்சிகளினைவலுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்க நிதியுதவி வழங்கும் சந்தை அபிவிருத்தி வசதியுடன் (MDF) சமீபத்தில்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இம்மூலோபய பங்குடைமையானது தங்களது பெறுமதிசங்கிலிகளின் ஊடேயான சிக்கலான நிதியிடல் மற்றும் அபிவிருத்தி இடைவெளிகளை தீர்ப்பதன் வாயிலாகதென்னை, கோப்பி மற்றும் மாம்பழத் துறைகளை உயர்த்துவதில் கவனம் செலுத்துகின்றது. இப்புரிந்துணர்வுஒப்பந்தமானது SDB வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்/பிரதம நிறைவேற்றதிகாரி, திரு. கபில ஆரியரத்ன மற்றும்MDF  இன் இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி. மியம் பிராச்சா உள்ளிட்ட இரு நிறுவனங்களினதும் சிரேஷ்டதலைவர்களது முன்னிலையில் இடம்பெற்றது. 

இப்பகுடைமை குறித்து கருத்துரைக்கையில், SDB வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்றதிகாரி, திரு. கபில ஆரியரத்ன அவர்கள், ‘இலங்கையின் அபிவிருத்தி மற்றும் செழுமையை நோக்கி பங்களிக்கும் தெளிவானநோக்குடனான வங்கியாக, உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஆதரவளிப்பதற்கான பொறுப்பு மற்றும் வாய்ப்புஎன இரண்டாகவும் நாம் இதனைப் பார்க்கின்றோம். விவசாயமானது பொருளாதாரத்தின் முக்கிய தூணாகவிளங்குவதுடன்> எமது பெறுமதி சங்கிலி நிதிவழங்கல் நிகழ்ச்சித்திட்டமானது ஒட்டுமொத்த உயிர்ச்சூழலையும்வலுப்படுத்துவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது – மூலதனமிடல் ஊடாக மாத்திரமின்றி இத்தகைய பங்குடைமைகளின்ஊடாகவும். MDF உடனான இக்கூட்டிணைவானது அடிமட்டத்தில் பொருளார்ந்த பெறுபேறினை வழங்கும் என்பதுடன்தேசிய பொருளாதாரத்திற்கும் நேர்க்கணியமாக பங்களிக்கும் என்றும் நாம் நம்புகின்றோம்.’ என்றார். 

இக்கூட்டுடைமையின் வாயிலாக, SDB வங்கி மற்றும் MDF  என்பன துறைசார் பங்குதாரர்களுக்கு கூட்டு-முதலீட்டுவாய்ப்புக்களையும், உற்பத்தி மற்றும் பெறுமதி சேர்ப்பினை மேம்படுத்துவதற்கான தொழிநுட்ப ஆலோசனைசேவைகளை விரிவாக்கவும், சந்தை உள்ளிடல் மற்றும் எழுச்சியுற்றுவரும் வியாபாரங்களுக்காக உற்பத்திபரிசோதனைகளை வளப்படுத்தவும், பரந்த வர்த்தக வலையமைப்புக்களுக்கு உற்பத்தியாளர்களை இணைப்பதன்வாயிலாக சந்தை நுண்ணறிவை வழங்குவதற்காகவும் நெருக்கமாக பணியாற்றவுள்ளன. இத்தகையஅணுகுமுறையானது சிறுவுடைமை பண்ணையாளர்கள், செயன்முறைப்படுத்துநர்கள், மற்றும் விவசாயசுயதொழில்வாண்மையாளர்கள் என்போரை வலுப்படுத்தவும் அதேவேளை  துறைசார் நெகிழ்வுடைமை மற்றும்போட்டித்தன்மையை வளப்படுத்தவும்  நோக்கங்கொண்டுள்ளது. 

MDF இன் இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி. மரியம் பிராச்சா அவர்கள் ‘ உலகளவில் உயருகின்றகேள்விகளுடன், இலங்கையின் விசேட பண்டங்களான கோப்பி, மாம்பழம் மற்றும் தேங்காய் என்பன வளர்ச்சியில்சிறப்பான ஸ்தானத்தில் காணப்படுகின்றன. மூலோபாய முதலீடு மற்றும் வலுவான உள்ளுர் பங்குடைமைகளால்இத்துறைகளை உயர் பெறுமதியுடைய ஏற்றுமதி நகர்த்துகைகளுக்கு மாற்றவும், வியாபாரத்திற்கான உண்மைவருமானத்தையும் மற்றும் சமுதாயத்திற்கான நன்மைகளையும் உருவாக்க முடியும். SDB வங்கியுடனானஇப்பங்குடைமையானது இலங்கையின் விவசாயத் துறையானது வலுவான உயரங்களை அடைவதனை பார்ப்பதற்கானஎமது அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையினை உறுதிப்படுத்தும் என MDF நம்புகின்றது. 

பெறுமதி சங்கிலியானது உற்பத்தியின் முழுமையான பயணத்தை – பயிரிடல் மற்றும் அறுவடை முதல்செயன்முறைப்படுத்தல், சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் வரை – பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இலங்கையின் விவசாயத் துறையில் இச்சங்கிலி ஊடான பல செயற்பாட்டாளர்கள் மூலதனம், நிபுணத்துவம் மற்றும்சந்தை நெறிப்பாதைக்கான அணுகலில் நோக்கங்கொண்டுள்ளனர். இப்பெறுமதி சங்கிலி நிதி வழங்கல் துவக்கத்தின்ஊடாக, SDB  வங்கியானது இவ்விடைவெளிகளை நிரப்பவும் மிகவும் உள்ளடக்கமான> கிராமிய பொருளாதாரத்தின்ஊடாக நிலைபேண் வளர்ச்சியை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளது.

MDF  நிறுவனமானது, தேங்காய்> கோப்பி மற்றும் மாம்பழத் துறைகளில் முக்கிய பங்குடைமையாளர்களுடன் ஏலவேவலுவான உறவுகளை கட்டமைத்துள்ளதுடன், இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலான முதல் தடைவையாகஇலங்கையில் வங்கித்துறை பங்காளருடன் ஈடுபட்டுள்ளமையானது சந்தை அபிவிருத்தி முயற்சிகளுடன் நிதிசார்தீர்வுகளை ஒருங்கிணைப்பதனை நோக்கிய முக்கியதொரு முன்னெடுப்பினையும் குறிக்கின்றது. 

இந்நிகழ்ச்சித்திட்டத்தில் வினைத்திறனுடன் ஈடுபடவும் தேசத்திற்காக மிகவும் நெகிழ்வுடையதும்உள்ளடக்கமானதுமான விவசாய பொருளாதாரத்தினை கட்டமைக்க பங்களிக்கவும் தொடர்புடைய அனைத்துஅரசாங்க முகவரகங்கள், அபிவிருத்தி பங்குதாரர்கள் மற்றும் தனியார் பங்குடைமையாளர்களையும் ஊக்குவிக்கின்றது.