உள்ளுர் தொழில்முயற்சியாண்மையாளர்களை உயர்ச்சியடையச் செய்தல் மற்றும் அவர்களுக்காக புதிய சந்தைகளைத்திறத்தல் என்பவற்றுக்கான அதனது அயராத அர்ப்பணிப்பின் தொடர்ச்சியாக, SDB சமீபத்தில் எப்.ஆர்.சேனநாயக்கமாவத்தையிலுள்ள கொழும்பு நகர சபை மண்டப வளாக முன்றலில், “SDB வியாபார பிரதீபா 2025” வர்த்தக சந்தைதுவக்க விழாவினை பெருமையுடன் நடாத்தியது . இந்நிகழ்வானது SDB வங்கியின் கிராமிய எழுச்சிநிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நிகழ்வொன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன், அது மேல் மாகாண ஆளுநர், திரு. ஹனிப் யூசுப்; SDB வங்கியின் தவிசாளர், திருமதி டினிதி ரத்நாயக்க; நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்றுஅதிகாரி, திரு. கபில ஆரியரத்ன; மற்றும் SDB வங்கியின் பெருநிறுவன முகாமைத்துவ அணி என்பவற்றின்பங்கேற்பினால் சிறப்பிக்கப்பட்டிருந்தது. இச்சந்தையானது பாரம்பரிய உணவு மற்றும் பானங்கள், பதப்படுத்தப்பட்டஉணவுகள், சூழல் நேய உற்பத்திகள், கைவினைப்பொருட்கள், மற்றும் பத்திக் கைதறி ஆடைகள் போன்ற பல்வேறுஉற்பத்திகளினை சிறப்பம்சமாக கொண்டிருந்ததுடன், 100 அதிசிறப்பான உள்ளுர்தொழில்முயற்சியாண்மையாளர்களின் பன்முக திறன்களை வெளிப்படுத்துவதாகவும் காணப்பட்டது.
அதனது துவக்கம் முதலே, SDB வங்கியின் கிராமிய எழுச்சி நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை முழுதுமானசுயதொழில்வாண்மையாளர்களை வலுப்படுத்துவதற்கான கருவியாகவே விளங்கிவந்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள், பிரதேச செயலகங்கள், மற்றும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடனான ஒருங்கிணைவினை வளர்ப்பதன் ஊடாக, நாடளாவியரீதியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3000 இற்கும் மேற்பட்ட சுயதொழில்வாண்மையாளர்களுக்குவெற்றிகரமாக பலனளித்துள்ளது. இப்பயணத்தின் ஒரு அங்கமாக, SDB வங்கியானது உயர் தரத்திலான உற்பத்திபொருட்களை விற்பனை செய்வதன் ஊடாக, குறிப்பிடத்தக்க வருமானம் மற்றும் அங்கீகரிக்கப்படும் நிலையைஉருவாக்கி, வர்த்தக சந்தை அனுபவத்தினை பழக்கப்படுத்திக்கொள்ள இச்சுயதொழில்வாண்மையாளர்களுக்கு உதவபல சிறிய அளவிலாள சந்தைகளை உருவாக்கியிருந்தது. SDB வங்கியினால் இச்சந்தையை ஒழுங்கமைப்பதன் மையநோக்கமாக, இவ்வடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டதாக, “SDB வியாபார பிரதீபா 2025”, இச்சிறியவிலானஉள்ளுர சுயதொழில்வாண்மையாளர்களின் உற்பத்திகள் மற்றும் வர்த்தக நாமங்களிற்கான புதிய சந்தைவாய்ப்புக்களையும், புதிய வாடிக்கையாளர் பிரிவுகளையும் மற்றும் நல்ல அங்கீகாரத்தினையும் திறந்துள்ளது.
இந்நிகழ்வின்போது, இவ்வுள்ளுர் சுயதொழில்வாண்மையாளர்களின் வியாபாரத்தினை மேலும் விளம்பரப்படுத்துவதற்காக SDB வியாபார பிரதீபா மார்க்கெட் பிளேஸ் எனும் தலைப்பில் சந்தை வடிவில் முகநூல்சமுதாய குழுவொன்றையும் ஆரம்பித்துள்ளது. இப்புத்தாக்கமான மேடையானது அவர்களது அடைவுகளைவிரிவுபடுத்துவதற்கும் தங்களது உற்பத்திகளை பரந்த வாடிக்கையாளர்களுக்கு விளம்பரப்படுத்துவதற்கும் ஆர்வமிகுவாயப்புக்களை வழங்குவதுடன், வளர்ச்சி மற்றும் அறியப்படுவதற்கான புதிய பாதைகளையும் உருவாக்கியுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றும்போது, நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. கபில ஆரியரத்னஅவர்கள், “எம்முடைய கிராமிய எழுச்சி நிகழ்ச்சித்திட்டமானது ஒரு துவக்கம் என்பதற்கும் அப்பாலானது; இது உள்ளுர்சுயதொழில்வாண்மையாளர்களை கிராமிய சமுதாய எழுச்சியூடாக வலுப்படுத்துவதற்கும், புத்தாக்கத்தினைமுற்செலுத்தவும் மற்றும் எமது தேசத்தின் சுயதொழில்வாண்மையாளர்களது திறனுக்கான வாய்ப்புக்களைஉருவாக்குவதற்குமான செயற்பாடாகும். எம்முடைய சொந்த சுயதொழில்வாண்மையாளர்களது திறன்களையும்புத்தாக்கத்தினையும் மதித்து வளர்க்கும் வங்கியொன்றாக, அவர்களது அனைத்து வகையான வியாபாரநடவடிக்கைகளின் அபிவிருத்தியிலும் ஆதரவளிப்பதில் மிக்க பெருமிதம் கொள்கின்றோம்.” என்றார்.
இவ்வர்த்தக சந்தை மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சந்தை இடங்கள் என்பவற்றின் ஊடாக, SDB வங்கியானதுஇலங்கையின் அபிவிருத்தி வலு மையமாக விளங்கும் அதன் நோக்கத்தினை விரிவுபடுத்தியுள்ளது. வியாபராவளர்ச்சிக்கான விலைமதிப்பற்ற மேடையொன்றினை உருவாக்கியிருப்பதன் ஊடாக, ஒரு நேரத்தில் ஒருவியாபாரத்திற்காக சுயதொழில்வாண்மை கிடைப்பரப்பை நிலைமாற்றுவதனை தொடரும்.