ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட தொழில்சார் கல்லூரியான College of Contract Management நிறுவனம் ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் ஏனைய நாடுகளில்…
Category: Uncategorized
லிப்டன் பெயரை உலகிற்கு கொண்டு சென்றதம்பதென்ன தேயிலைத் தோட்டத்தின் வரலாறு
Ceylon Tea என்ற பெயருடன் பிணைந்த அந்த இதிகாசத்தை நினைவுகூரும் போது, சர் தோமஸ் லிப்டனின் பெயர் என்றென்றும் மறக்கப்பட மாட்டாது.…
ஆங்கிலஅணுகல்புலமைப்பரிசில்நிகழ்ச்சித்திட்டத்தின்ஊடாகஇளைஞர்களைவலுவூட்டுவதில் 20 வருடநிறைவைகொண்டாடும்இலங்கைக்கானஅமெரிக்கதூதரகம்
ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஆங்கில மொழித் திறன்கள், தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் கலாசாரங்களுக்குஇடையிலான தொடர்புகள் சம்பந்தமாக 1,300 இற்கும் அதிகமான இலங்கை இளைஞர்களை வலுவூட்டியுள்ள மாற்றம்ஏற்படுத்தும் முயற்சியொன்றான ஆங்கில அணுகல் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் (English Access Scholarship Program) 20 ஆவது ஆண்டு நிறைவை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த வருடம் பெருமையுடன்சிறப்பிக்கிறது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் உலகளாவிய ரீதியில் 2004 ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டஇந்த ஆங்கில அணுகல் நிகழ்ச்சித்திட்டமானது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய 13 வயதுக்கும் 15 வயதுக்கும்இடைப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில மொழி திறன்களில் வலுவான அடித்தளமொன்றை வழங்குகிறது. அதன்இரண்டு வருடம் முழுவதுமான இலவச 360-மணிநேர பாடத்திட்டத்தின் ஊடாக இலங்கை இளைஞர்கள்தலைமைத்துவ பயிற்சி, தொழில்சார் அபிவிருத்தி வாய்ப்புகள் மற்றும் அமெரிக்க கலாசார மற்றும் ஜனநாயகவிழுமியங்களுக்கான வெளிப்பாடுகளை பெற்றுக்கொள்கின்றனர். இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்ட அனுபவங்காளனதுசிறந்த கல்வி மற்றும் தொழில்சார் வாய்ப்புகளுக்கான கதவுகளை திறப்பதுடன், எதிர்காலத்தில் அமெரிக்காவிலானபரிமாற்ற மற்றும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு போட்டியிடுவதற்கும் மாணவர்களை தயார் செய்கிறது. ‘இலங்கையில் ஆங்கில அணுகல் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவைகொண்டாடுவதானது, கல்வியின் மூலம் இளைஞர்களை வலுவூட்டுவதிலான எமது நீடித்த உறுதிப்பாட்டுக்கு சான்றுபகிர்வதாக அமைந்துள்ளது,’ என்று அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். ‘இந்த நிகழ்ச்சித்திட்டமானதுஅத்தியவசியமான ஆங்கில மொழி திறன்களை வழங்குவதுடன் மட்டுமல்லாது, தலைமைத்துவம், தொழில்சார்அபிவிருத்தி மற்றும் கலசாரங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஊக்குவிக்கிறது. சமூகங்களுக்கு இடையில்இணைப்பை ஏற்படுத்துவதன் மூலமும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு வாய்ப்புகளைஉருவாக்கியும் நாம் பிரகாசமானதும் அனைவரையும் மேலும் உள்வாங்கிய எதிர்காலமொன்றிலும் நாம் முதலீடு செய்துகொண்டிருக்கிறோம்,’ என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்டமானது வெறுமனே மாணவர்களின் வாழ்க்கையை மாற்றுவது மட்டுமல்லாது, அதுஇலங்கயில் ஆங்கில மொழி கற்பித்தலை வலுப்படுத்துவதுடன், மாணவர்களை உலகளாவிய அணுகல்வலையமைப்பிற்கும் மற்றும் இந்த நாட்டின் அனைத்து மூலைகளில் இருந்துமான சகாக்களுடனும் இணைக்கிறது. இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆசிரியர்கள் உயர்தரத்திலான பயிற்சிகளை பெறுவதுடன், தேசிய மற்றும்பிராந்திய மாநாடுகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகளுடன் உலகளாவிய பயிற்சி சமூகமொன்றுடனும்இணைந்து கொள்கின்றனர். இந்த வருடத்தின் ஆரம்பத்தில், 34 இலங்கை கல்வியலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் முன்னாள் மாணவ சமூகத்தினர் நேபாளத்தின் காத்மண்டுவில் நடைபெற்ற 20ஆவது ஆண்டு நிறைறையொட்டியபிராந்திய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டனர். ‘நாம் எவ்வாறு கல்வி ரீதியான வாய்ப்புகளை விஸ்தரிக்கிறோம் மற்றும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில்எவ்வாறு வலுவான உறவுகளை கட்டியெழுப்புகிறோம் என்பதில் இந்த ஆங்கில அணுகல் நிகழ்ச்சித்திட்டமானதுமுக்கியமான அங்கமொன்றாக அமைந்திருக்கிறது,’ என்று அமெரிக்க தூதரகத்தின் பொது அலுவல்கள் அதிகாரிஹய்டி ஹட்டன்பேக் தெரிவித்தார். ‘மோதல்களுக்கு பின்னர் மீட்சி அடைந்துவரும் நாடொன்றில், இந்த அணுகல்நிகழ்ச்சித்திட்டமானது ஆங்கிலம் கற்பித்தலுக்கு மேலதிகமாக பல விடயங்களை செய்துள்ளது. அது வேறுபட்டபின்னணிகளிலிருந்தான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றுபடுத்துவதுடன், அவர்களை உலகளாவியவலையமைப்பொன்றுக்கும் இணைக்கிறது. அதுமட்டுமல்லாது, சமூகங்கள் முழுவதும் புரிந்துணர்வு மற்றும்கூட்டிணைவை ஊக்குவிக்கும் அதேவேளை, தமது கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கான முயற்சியில்மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் திறன்களையும் நம்பிக்கையும் இந்த நிகழ்ச்சித்திட்டம் வழங்குகிறது,’ என்றும்அவர் குறிப்பிட்டார். ஆங்கிலத்தை இணைப்பு மொழியொன்றாக பயன்படுத்தி வேறுபட்ட பின்னணிகளில் இருந்தான மாணவர்களைஇணைப்பதை அணுகல் நிகழ்ச்சித்திட்ட வழங்குனர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பிணைப்புகளானது, வாழ்நாள்முழுவதுமான இணைப்புகளை உருவாக்கி இன மற்றும் மத வேறுபாடுகளை கடந்து செல்ல வழிவகுக்கின்றன. ‘பலதரப்பட்ட பின்னணிகளிலிருந்தான மக்களுடன் செயல்படுவதற்கான நம்பிக்கையையும் மற்றும் தெளிவு மற்றும்தன்னம்பிக்கையுடன் உரையாற்றுவதற்கும் விடயங்களை முன்வைப்பதற்குமான திறன்களையும் எனக்கு வழங்கி, இந்தஅணுகல் நிகழ்ச்சித்திட்டமானது நான் மற்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்ளும் விதத்தை மாற்றியது,’ என்றுயாழ்ப்பாணத் சேர்ந்த அணுகல் நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னாள் மாணவியான மாதங்கி தமது அனுபவத்தைபகிர்ந்துகொண்டுள்ளார். இந்த 20 ஆவது ஆண்டு நிறைவு என்ற மைல்க்கல்லை சிறப்பிக்கும் நிமித்தம் கண்டியில் நடைபெறும் நான்கு நாட்கள்முகாமானது யாழ்ப்பாணம், காலி, குருநாகல், திருகோணமலை, மற்றும் நுவரெலியாவில் இருந்து அணுகல்நிகழ்ச்சித்திட்டத்தில் தற்போது பங்குகொள்ளும் 150 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றிணைக்கவுள்ளது. ஜோர்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தின் அணுசரனையிலான ஆங்கில மொழி புலமையாளர்கள் தலைமையிலானஊடாடல் அமர்வுகள், ஒரு சமூக சேவை திட்டம் மற்றும் மாணவர்களின் தனித்துவமான அனுபவங்களைவெளிப்படுத்தும் ‘கலாச்சார இரவு’ நிகழ்ச்சி என்பனவும் இந்த நிகழ்வில் இடம்பெறவுளள்ன. ஏனையபேச்சாளர்களுடன் தூதுவர் ஜுலீ சங்கும் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்வில் கலந்துகொள்வார். இலங்கையின் மேல் மாகாணத்தைச் சேர்ந்த வெறும் 56 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அணுகல்நிகழ்ச்சித்திட்டமானது, தற்போது 185 பேர் கொண்ட இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மிகப்பெரிய முன்னாள் மாணவசமூகத்தின் இருப்பிடமான கண்டி உட்பட நாடு முழுவதும் 50 இற்கும் மேற்பட்ட இடங்களைச் சேர்ந்த பழையமாணவர்களைக் கொண்டுள்ளது. வரவிருக்கும் 2025-2027 சுழற்சிக்காக, இந்த நிகழ்ச்சித்திட்டமானது யாழ்ப்பாணம், நுவரெலியா, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் இருந்தானபாடசாலைகளை சேர்ந்த 150 புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும்.…