சகோதர மற்றும் சகோதரிகள் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும் விளையாட்டு, இசை மற்றும் கேளிக்கைக்காக ஒன்றுசெரும் உன்னத தருணம் ஆகஸ்ட் 30ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பிலுள்ள CR&FC மைதானத்தில் மீண்டும் கோலாகலமானநிகழ்ச்சியொன்று அரங்கேறுகிறது. அன்றைய தினம் பாடசாலைகளின் பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும்இணைந்த ரக்பி அணிகள் களமிறங்கி, தலைசிறந்த இசைக்குழுக்கள் மற்றும் DJ கலைஞர்களின் இசைவெள்ளத்தில்குடும்பங்கள் சகிதம் குதூகலித்து மகிழக்கூடிய பிரத்தியேகமான தருணம் உருவாகிறது. அணிக்கு ஏழு பேர் கொண்டC-Rugby Tag Rugby சுற்றுத்தொடரில் மொத்தமாக 16 அணிகள் விளையாடவுள்ளன. இந்த நிகழ்;ச்சியைஇசிப்பத்தனை கல்லூரியின் பழைய மாணவரும், CR&FC கழகம் மற்றும் தேசிய அணி ரக்பி அணிகளுக்காகவிளையாடியவரும், பிரபல ரக்பி ஆளமையுமான டில்ரோய் பெர்னாண்டோ தலைமையிலான AGOAL Internationalஎன்ற அமைப்பு எட்டாவது தடவையாகவும் ஒழுங்குபடுத்துகிறது. சகோதர சகோதரிகளின் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களையும், பழைய மாணவிகளையும்ஒன்றுசேர்க்கும் ஒரே சுற்றுத்தொடர் இதுவாகும். தலைசிறந்த இசையுடன், ஒட்டுமொத்த குடும்பத்திற்குமானகேளிக்கைகள் நிறைந்த விருந்துடன் சாகசங்களுடன் கூடிய ரக்பி விளையாட்டுடன் நட்பின் நேசங்களை மீளவும்புதுப்பித்து, இனிமையான ஞாபகங்களை மீட்டுத் தர வழிவகுக்கும் பிரத்தியேகமான சுற்றுத்தொடர் என்ற பெருமையும்இதற்குக் கிடைக்கிறது. இந்நிகழ்ச்சியில் கடந்த காலத்தின் பொன்னான நாட்களை மீட்டிப் பார்த்து, பழைய நட்புக்களுடன் மீண்டும்தோள்கோர்த்து நிற்பதுடன் நில்லாமல், இலங்கையின் சிறந்த இசைக்குழுக்கள் மற்றும் DJ கலைஞர்களின்இசைவிருந்துடன் சங்கமிக்கலாம். இங்கு விற்பனை நிலையங்கள், நடைபாதைக் கடைகள், சிறுவர்களுக்கானவிளையாட்டுகள் போன்றவை உள்ளடங்கிய கார்னிவெல் நிகழ்ச்சியும் பொழுதுகளை இனிமையாக்கும். Slipping Chairs, Dreaming of Saturn, Pop Culture and Section 8…