கொழும்பு, இலங்கை. இலங்கையில் சொந்தமாக வீடொன்றைக் கொண்டிருப்பதில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும் துணிச்சலான ஒரு நகர்வாக, John Keells Properties ஆனது NDB வங்கியின் கூட்டாண்மையுடன் 9.75% என்ற சந்தையில் கிடைக்கும் மிகக் குறைந்த வீட்டுக்கடன் வட்டி வீதத்துடனான வீட்டுக்கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இது VIMAN Ja-Ela செயற்திட்டத்தில் மனைகளை கொள்வனவு செய்கின்றவர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றது. தொழில்துறையில் மிகக் குறைந்த வட்டி வீதத்துடன் வீட்டுக்கடன் வசதி கிடைப்பதுடன் சேர்த்து, வீட்டின் பெறுமதியின் 100% தொகையும் கடனாக வழங்கப்படுகின்றது. எவ்விதமான ஆரம்பக் கொடுப்பனவும் இன்றி இன்று நாட்டில் கிடைக்கப்பெறுகின்ற இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் கவர்ச்சிகரமான வீட்டுக்கடன் தீர்வையும் இது வழங்குகின்றது.
வீடுகளை வாங்க விரும்புகின்றவர்கள் முகங்கொடுக்கின்ற இரு பாரிய சவால்களாகக் காணப்படுகின்ற பாரிய தொகை கொண்ட ஆரம்பக் கொடுப்பனவுச் சுமை மற்றும் கூடிய வட்டி வீதம் ஆகியவற்றுக்கான தீர்வை இந்த முன்னோடி முயற்சியாக நேரடியாக வழங்குகின்றது. மேற்குறிப்பிட்ட இரு தடைகளையும் அகற்றுவதனூடாக, John Keells Properties மற்றும் NDB வங்கி ஆகியன ஒன்றிணைந்து, இலங்கை மக்கள் இன்னும் கூடுதலான அளவில் மிகவும் இலகுவாகவும், நம்பிக்கையுடனும் வீடுகளை சொந்தமாக்கிக் கொள்ளும் முயற்சியை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு வலுவூட்டுகின்றன.
“வழக்கத்தை மாற்றியமைத்து, அதிக அளவில் மக்களுக்கு தரமான வாழ்விட வசதிக்கான வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதே எப்போதும் John Keells Properties ன் இலக்காகக் காணப்படுகின்றது,” என்று John Keells Properties ன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரி நதீம் ஷம்ஸ் அவர்கள் குறிப்பிட்டார். “NDBவங்கியுடனான கூட்டாண்மையும் அதையே வழங்குவதுடன், வீடுகளை வாங்க நினைப்போர் முகங்கொடுக்கின்ற பாரிய நிதிச்சுமையை அகற்றி, ஒப்பற்ற வட்டி வீதத்துடன் அவற்றை வழங்குகின்றது. இது வெறுமனே வீடுகளை விற்பனை செய்வது என்பது மாத்திரமல்ல, மாறாக இன்று வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கனவைச் சுமப்பவர்களுக்கு அதனை நனவாக்கிக் கொள்ளும் வகையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திடும் ஒரு முயற்சியாக மாறியுள்ளது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நிதியியல் புத்தாக்கங்களில் நீண்ட காலமாக முன்னிலை வகித்து வந்துள்ள NDB வங்கி, வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டுதல் மற்றும் பொருளாதார ரீதியாக அனைவரையும் அரவணைத்தல் ஆகியவற்றின் மீதான தனது அர்ப்பணிப்பை இந்த பிரத்தியேகமான தீர்வு மூலமாக வெளிக்கொண்டு வருகின்றது.
“முற்போக்கான வளர்ச்சிக்கு இடமளித்து, இலங்கையில் தனிமனிதர்களுக்கும், குடும்பங்களுக்கும் வளர்ச்சிவாய்ப்புக்களை முழுமையாக வெளிக்கொண்டு வருவதில் எமது குறிக்கோளுக்கு மிகச் சிறந்த உதாரணமாக இக்கூட்டாண்மை அமைந்துள்ளது,” என்று NDB வங்கியின் தனிநபர் நிதித் தீர்வுகளுக்கான சிரேஷ்ட முகாமையாளர்நதீகா டி அல்விஸ் அவர்கள் குறிப்பிட்டார். “நாட்டில் மிகக் குறைந்த வட்டி வீதத்துடனான வீட்டுக்கடனை, வீட்டின் பெறுமதியில் 100% தொகையுடன் வழங்கி, நீண்ட காலமாக காணப்பட்ட நிதியியல் முட்டுக்கட்டைகளை அகற்றி, வீட்டை சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற கனவைச் சுமக்கின்றவர்களுக்கு அதனை நனவாக்கி,வெளிப்படையான பலன்களை வழங்குகின்றோம். இது எமக்கு பெருமையளிக்கும் ஒரு தருணமாக காணப்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் அளித்து, தொழில்துறையில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்கள் கூட்டாக உழைப்பதால் அடையக்கூடிய பலாபலனுக்கு இது சிறந்ததொரு சான்றாகும்,” என்று குறிப்பிட்டார்.
இந்த முயற்சியுடன், கட்டடக்கலை மகத்துவம் மற்றும் சமூக வடிவமைப்பில் தொழில்துறையில் தரஒப்பீட்டு நியமத்திற்கு John Keells Properties தொடர்ந்தும் மீள்வரைவிலக்கணம் வகுப்பது மாத்திரமன்றி, இலங்கை மக்கள் சொந்தமாக வீடொன்றைக் கொண்டிருப்பதற்கான வழிமுறைக்கும் வாய்ப்பளிக்கின்றது.
“வீடு என்பது ஒரு கட்டடம் என்பதற்கும் அப்பாற்பட்டது, அது ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் உடமைக்கான ஒரு அத்திவாரம் என நாம் நம்புகின்றோம்,” என்று John Keells Properties ன் சொத்து முகாமைத்துவத்திற்கான தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் உப தலைவருமான ருசிரு அபேசிங்க அவர்கள் குறிப்பிட்டார். “இந்த வகையில் இது வரை காலமும் கிடைக்கப்பெற்றிராத ஒரு சலுகையுடன், எமது நம்பிக்கையை வெளிக்காண்பிப்பதில் தைரியமாக அடிகளை முன்னெடுத்து வைப்பதுடன், தரமான, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள வீடொன்றை சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற கனவை நனவாக்குவது மாத்திரமன்றி, அதனை அதிக எண்ணிக்கையான இலங்கை மக்கள் அடையப்பெறும் வகையில் நடைமுறைச் சாத்தியமான தீர்வையும் வழங்குகின்றோம். இது எம்மையும், ஒட்டுமொத்த ஆதனச் சந்தையையும் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனை இலக்காக மாறியுள்ளது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
John Keells Properties ன் புத்தம்புதிய குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டமான VIMAN Ja-Ela, துறைமுகத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையூடாக வெறும் 30 நிமிடத்தில் கொழும்பிலிருந்து செல்லக்கூடிய இடத்தில் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆறு ஏக்கர் விசாலமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இச்செயற்திட்டத்தில் 60% க்கும் கூடுதலான நிலப்பரப்பு திறந்த வெளி மற்றும் பசுமை நிறைந்த இடங்களாககாணப்படுவதுடன், நீண்ட கால அடிப்படையில் மதிப்பு, சௌகரியம், மற்றும் மன நிம்மதி ஆகியவற்றை விரும்புகின்ற தொழில் புரிகின்றவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட 418 வீடுகளை VIMAN கொண்டுள்ளது. அழகிய பூந்தோட்டங்கள், நடைப்பயிற்சிப் பாதைகள், கிளப்ஹவுஸ், நீச்சல் தடாகம், சிறுவர்கள் விளையாடும் பகுதி, 24/7 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ள VIMAN, தற்போது இந்த ஒப்பற்ற கடன் வசதியின் பலனாக அதிக அளவான மக்கள் வாங்கக்கூடிய வகையில் புறநகரில் புதிய தராதரம் கொண்ட வாழ்வை வழங்குகின்றது.