கிராமப்புற வாழ்வாதாரங்களையும், தனித்துவமிக்க இலங்கைச் சிறுத்தைகளையும் பாதுகாத்தல் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP), தனது பல்லுயிர் நிதி முன்முயற்சியின் (BIOFIN) கீழ், வனவிலங்கு மற்றும்…
Author: Editor
மெல்லிய திரையுடன் சிறந்த பார்வை அனுபவத்தை வழங்கும்Samsung இன் 32″-அங்குல HD ஸ்மார்ட் தொலைக்காட்சி அறிமுகம்
தொடர்ச்சியாக 19 ஆண்டுகளாக உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் Samsung, 32″-அங்குல உயர்-தெளிவுத்திறன் கொண்ட மெல்லிய திரையுடைய HD ஸ்மார்ட்…
இலங்கையின் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் SLINTEC-இன் அங்கீகரிக்கப்பட்ட உணவு பரிசோதனை சேவைகள்
இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLINTEC) உயர்தர பகுப்பாய்வு சேவைகள் ஆய்வகம் இலங்கை அங்கீகார சபையிடமிருந்து (SLAB) ISO/IEC 17025:2017 அங்கீகாரத்தை…
SLADA ரேசிங் செம்பியன்ஷிப் 2025 இற்கான பிரதான அனுசரணையாளராக இலங்கையின் மோட்டார் பந்தயத்திற்கு புத்துயிரளிக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வே
இலங்கையின் முதற்தர தன்னியக்க நிறப்பூச்சு கம்பெனியான, ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயானது, மோட்டார் பந்தய நாட்காட்டியினை ஒகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையினில் பற்றி எரிய…
மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு நீங்கள் தயாரா?
சகோதர மற்றும் சகோதரிகள் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும் விளையாட்டு, இசை மற்றும் கேளிக்கைக்காக ஒன்றுசெரும் உன்னத தருணம் ஆகஸ்ட் 30ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பிலுள்ள CR&FC மைதானத்தில் மீண்டும் கோலாகலமானநிகழ்ச்சியொன்று அரங்கேறுகிறது. அன்றைய தினம் பாடசாலைகளின் பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும்இணைந்த ரக்பி அணிகள் களமிறங்கி, தலைசிறந்த இசைக்குழுக்கள் மற்றும் DJ கலைஞர்களின் இசைவெள்ளத்தில்குடும்பங்கள் சகிதம் குதூகலித்து மகிழக்கூடிய பிரத்தியேகமான தருணம் உருவாகிறது. அணிக்கு ஏழு பேர் கொண்டC-Rugby Tag Rugby சுற்றுத்தொடரில் மொத்தமாக 16 அணிகள் விளையாடவுள்ளன. இந்த நிகழ்;ச்சியைஇசிப்பத்தனை கல்லூரியின் பழைய மாணவரும், CR&FC கழகம் மற்றும் தேசிய அணி ரக்பி அணிகளுக்காகவிளையாடியவரும், பிரபல ரக்பி ஆளமையுமான டில்ரோய் பெர்னாண்டோ தலைமையிலான AGOAL Internationalஎன்ற அமைப்பு எட்டாவது தடவையாகவும் ஒழுங்குபடுத்துகிறது. சகோதர சகோதரிகளின் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களையும், பழைய மாணவிகளையும்ஒன்றுசேர்க்கும் ஒரே சுற்றுத்தொடர் இதுவாகும். தலைசிறந்த இசையுடன், ஒட்டுமொத்த குடும்பத்திற்குமானகேளிக்கைகள் நிறைந்த விருந்துடன் சாகசங்களுடன் கூடிய ரக்பி விளையாட்டுடன் நட்பின் நேசங்களை மீளவும்புதுப்பித்து, இனிமையான ஞாபகங்களை மீட்டுத் தர வழிவகுக்கும் பிரத்தியேகமான சுற்றுத்தொடர் என்ற பெருமையும்இதற்குக் கிடைக்கிறது. இந்நிகழ்ச்சியில் கடந்த காலத்தின் பொன்னான நாட்களை மீட்டிப் பார்த்து, பழைய நட்புக்களுடன் மீண்டும்தோள்கோர்த்து நிற்பதுடன் நில்லாமல், இலங்கையின் சிறந்த இசைக்குழுக்கள் மற்றும் DJ கலைஞர்களின்இசைவிருந்துடன் சங்கமிக்கலாம். இங்கு விற்பனை நிலையங்கள், நடைபாதைக் கடைகள், சிறுவர்களுக்கானவிளையாட்டுகள் போன்றவை உள்ளடங்கிய கார்னிவெல் நிகழ்ச்சியும் பொழுதுகளை இனிமையாக்கும். Slipping Chairs, Dreaming of Saturn, Pop Culture and Section 8…
இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது புதிய GRI- உதவியுடன் ESG வெளிப்படைத்தன்மையை பலப்படுத்துகிறது
இலங்கையின் மிக முக்கியமான ஏற்றுமதித் துறையான ஆடைத் துறையில் உலகத்தர ESG அறிக்கை முறைகளை மேம்படுத்துவதற்கான”நிலைத்தன்மை வணிகத்திற்கான வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல்” (Improving Transparency for Sustainable Business – ITSB) திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியை உலகளாவிய அறிக்கை முன்முயற்சி (GRI) தெற்கு ஆசியா, இலங்கையின் நிலைத்தன்மைவளர்ச்சி மன்றம் (SDC), ஏற்றுமதி வளர்ச்சிக்கான சபையம் (EDB) மற்றும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) ஆகியனஇணைந்து முன்னெடுக்கின்றன. Swedish International Development Cooperation Agency (SIDA)இன் ஒத்துழைப்புடன், தெற்காசியாவில் உள்ள ITSB திட்டம், பெரியசர்வதேச நிறுவனங்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என ஜவுளி மற்றும் ஆடை நிறுவனங்கள் முழுவதும் நீண்டகால திறனைவளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. பங்கேற்கும் நிறுவனங்கள், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட GRI தரநிலைகளைப் பயன்படுத்தி, தொழிலாளர் நடைமுறைகள், காலநிலை தாக்கம், எரிசக்தி பயன்பாடு, பொருளாதார தாக்கம் மற்றும் கழிவு நிர்வகிப்பு உள்ளிட்ட முக்கியநிலைத்தன்மை தலைப்புகள் குறித்து வெளிப்படையாகப் புகாரளிப்பது எப்படி என்பது குறித்த பயிற்சியைப் பெறுவார்கள். வணிகங்களுக்குஅப்பால், இந்த முன்முயற்சியானது கட்டுப்பாட்டாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் குழுக்கள், ஊடகங்கள் மற்றும்கல்வித்துறை உள்ளிட்ட முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச நடிகர்களுடன் நெருக்கமாக செயல்படும். முழு நாள் திறன் மேம்பாட்டு அமர்வு 2025 ஜூலை 16 அன்று Courtyard by…
நிலையான வணிகத்தை வலுப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் CSDDD குறித்த உயர்மட்ட மாநாட்டை ஏற்பாடு செய்த SLAEA
ஜூலை 9 அன்று, இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் (SLAEA) கொழும்பு 07 இல் உள்ள ஜெட்விங்ஹோட்டலில் ஒரு முக்கிய தொழில்துறை கருத்தரங்கை நடத்தியது. இந்த நிகழ்வு, ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டுறவு நிலைத்தன்மைக்கானஉரிய விடாமுயற்சி கட்டளை (CSDDD) இன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்க பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைத்தது. இலங்கை ஏற்றுமதியாளர்களிடையே விழிப்புணர்வையும் தயார்நிலையையும் மேம்படுத்துவதே இந்தக் கருத்தரங்கின் நோக்கமாக இருந்தது. இக்கட்டளையின் பரந்த தாக்கம் இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில், குறிப்பாக ஆடை, தேயிலை மற்றும் ரப்பர் போன்ற முக்கியதுறைகளில், எவ்வாறு இருக்கும் என்பதை இது குறிப்பாக எடுத்துக்காட்டியது. இந்தக் கருத்தரங்கில் ஆடை உற்பத்தியாளர்கள், ஆலோசகர்கள், சட்ட வல்லுநர்கள், பொதுத்துறை பிரதிநிதிகள், மற்றும் தேயிலை, ரப்பர் போன்ற பல்வேறு தொழில்துறைகளைச்…
City of Dreams Sri Lanka – ஒரு தேசிய மாற்றத்தின் மைல்கல்
இலங்கையில் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய முதலீட்டுத் திட்டமாகவும், தெற்காசியாவின் முதல்ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாகவும் திகழும் “City of Dreams Sri Lanka” (COD SL) அதன் பெருமைக்குரிய பயணத்தைத் தொடங்கியது. அதன் அங்குரார்ப்பண நிகழ்வு பிரமாண்டமான விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆடம்பரமும், உள்ளூர் வடிவமைப்பும் ஒன்றிணைந்த ஒருதனித்துவமான இடமாக இந்த City of Dreams Sri Lanka, இலங்கையின் லட்சியங்கள், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொலைநோக்குப்பார்வையின் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. இலங்கை மற்றும் சர்வதேச கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய City of Dreams Sri Lankaவின் அங்குரார்ப்பண விழா, கண்கவர்நிகழ்ச்சிகளும் உணவு விருந்து நிகழ்வுகளும் நிறைந்து விளங்கியது. இந்த நிகழ்வின் போதே, புத்தாக்கமான அணுகுமுறைகள் மூலம் ஒருபிரமாண்டமான அனுபவத்தை உருவாக்க முனைந்த City…
உணர்வு, உருவம் மற்றும் வடிவமைப்பின் எதிர்காலத்தை வெளிப்படுத்தி இலங்கையில் கலர்நெக்ஸ்ட் 2025இனை வெளியிட்ட ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே
கொழும்பு இம்பீரியல் மோனார்க்கில் அற்புதமான ஒரு மாலையில், ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது அதனது முக்கியநிகழ்வான, கலர்நெக்ஸ்ட் 2025 இன் இரண்டாம் பதிப்பினை நடாத்தியது. வர்ணம் மற்றும் உருவ நுண்ணறிவிற்கெனநம்பகமான மேடையாக தென்னாசியா முழுதும் அறியப்பட்டுள்ள, கலர்நெக்ஸ்டானது உலகளாவிய வடிவமைப்புஎதிர்வுகூறலுடன் உணர்வுகளின் ஒத்திசைவினை ஒருங்கிணையச் செய்து அபரிதமாக ஆய்வுசெய்யப்பட்ட வருடாந்தஎதிர்வுகூறலினை வெளிப்படுத்தியது. ஏசியன் பெயிண்ட்ஸின் நவீனமயமான R&D தகவுகள் மற்றும் சர்வதேச வடிவமைப்பு உயிர்வகைமை என்பவற்றின் ஆதரவுடன்,கலர்நெக்ஸ்ட் என்பது வெறுமனே ஒரு எதிர்வுகூறலாக அன்றி – அறியப்பட்டு பகிரப்பட்ட புதிதாக தோற்றம்பெற்றுவரும்வண்ணங்களின் உணர்வுகள், பொருள்சார் புத்தாக்கங்கள் மற்றும் வடிவமைப்பு மாற்றங்கள் என்பவற்றை ஊடுகாட்டும்கண்ணாடியாகவும் காணப்படுகின்றது. யதார்த்த உலகத்தின் உள்முகத் தோற்றங்களை வடிவமைப்பு பாஷைகளில்மொழிபெயர்க்க இணைந்து பணியாற்றும் சமூகவியலாளர்கள், கட்டிட கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள்பங்கேற்ற வருடக்கணக்கான நீண்ட செயன்முறையிலிருந்து இவ்வருடாந்த புத்தாக்கமானது வகுக்கப்பெறுகின்றது. இதுகலர்நெக்ஸ்ட்டினை நிகழ்கால போக்குகளை எதிர்வுகூறுவதற்கு மாத்திரமின்றி அவற்றை வடிவமைப்பதற்குமாகஇத்தொழிற்றுறைக்கான சக்திவாய்ந்த கருவியாக்குகின்றது. 2025 ஆம் ஆண்டிற்கான வண்ணமாக இவ்வருடத்தின் எதிர்வுகூறலில் ஒண்சிவப்பு நிறம் (கார்டினல்) மகுடம் சூடியது. ஆத்மார்த்தமான, கருஞ்சிவப்பான, ஒண்சிவப்பு நிறமானது அதீத செறிவினை – ஆழமானதும் உணர்வுபூர்வமானதுமாகஉள்ளடக்கியுள்ளது. இது ஒரு ஏக்கம் மற்றும் அகப்புறநோக்கம் முதல் நெகிழ்வுத்தன்மை மற்றும் புத்தாக்கம் வரையில், மனிதஉணர்வுகளின் ஆழத்தினையும் நுணுக்கங்களையும் பேசுகின்றது. கட்டிட வடிவமைப்பு, உட்புற வடிவமைப்போ அல்லதுதனிப்பட்ட உணர்வு வெளிப்பாடோ, கார்டினலானது உணர்வு மற்றும் உரையாடலுக்கான வெளியாக வண்ணத்துடன்பங்கேற்பதற்கு வடிவமைப்பாளர்களை வரவேற்கின்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையில், ஏசியன் பெயிண்ட்ஸ் இன்டர்நேஷனல் பிரைவெட் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்றுஅதிகாரி, திரு.ஜோசப் ஏபன், அவர்கள் ஆய்வு மைய புத்தாக்கம் மற்றும் பிராந்திய ஒருங்கிணைவுகளுக்கான வர்த்தக நாமத்தின்அர்ப்பணிப்பினை மீளவலியுறுத்தினார். ஏசியன் பெயிண்ட்ஸின் பிராந்திய தலைவர், திரு. புத்தாதிடியா முகர்ஜி, ஏசியன்பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் இலங்கைக்கான தலைவர், திரு. வைத்தியலிங்கம் கிரிதரன், மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ்கோஸ்வேயின் இலங்கைக்கான சந்தைப்படுத்தல் தலைவர், திரு. அனுராதா எதிரிசிங்க ஆகியோரது பிரதம உரைகளுடன்கட்டிடக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரின் அதிமுக்கிய ஒன்றுகூடலையும் அம்மாலைஅலங்கரித்திருந்தது. கலர்நெக்ஸ்ட்டின் பிராந்திய சிறப்பம்சம் குறித்து கருத்துரைக்கையில், திரு. முகர்ஜி அவர்கள், “கலர்நெக்ஸ்ட்டானதுவடிவமைப்பு நுண்ணறிவு மற்றும் சந்தை எதிர்வுகூறலின் உச்சகட்டமாகும். எமக்கு, இது வெறுமனே ஒரு வண்ணத்தகடு அல்ல – வடிவமைப்பினில் செல்வாக்கு செலுத்தும் உணர்வுகள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களினை எதிர்பார்க்கும்தொழில்முறையாளர்களுக்கு நாம் உதவக்கூடிய ஊடுகாட்டும் கண்ணாடியாகும். அடையாளம் மற்றும் காலநிலையுடன்கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு என்பன ஆழமாக பிணைப்புற்றுள்ள இலங்கையில், கலர்நெக்ஸ்ட்டானதுவழிகாட்டியாக – உள்ளுர் உணர்வெழுச்சிகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளையில் நவீன வாழ்வியலை எமது பங்குதாரர்கள்வடிவமைக்க உதவுமொன்றாகியுள்ளது. உலக வடிவமைப்பு கருத்தாக்கங்களில் இலங்கையும் ஒரு பங்காளராக விளங்குவதனைஇது உறுதிப்படுத்தியுள்ளது.”’ என்றார். ஒண்சிவப்பு நிறத்தின் (கார்டினல்) அறிமுகத்துடன், 2025 ஆம் ஆண்டுக்கான எதிர்வுகூறலானது இத்துறையின் புத்தாக்கதொழில்முறையாளர்களுக்காக புதிய பொருட்சார் வண்ணப்பேழைகள் மற்றும் கதைகூறும் கருவிகளை வழங்கி – உணர்வுப்பூர்வமான ஆழம், இயற்கையின் மூலக்கூற்று பலம், கலாச்சார நம்பிக்கை, மற்றும் அதியுச்ச எதிர்குரல் என்பவற்றைவெளிப்படுத்தும் நான்கு மிகமுக்கிய போக்குகளின் பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அம்மாலைநேர நிகழ்வானது, உலக எண்ணப்போக்குகள் மற்றும் இலங்கையின் வடிவமைப்பு ஆர்வங்களுக்கு இடையிலானபாலமொன்றாக ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் வகிபாகத்தினை மீளவலியுறுத்தி நவீனகால போக்குகளின் நிறுவல்களதுஅனுபவபூர்வமான பயணம் மற்றும் ஆண்டுக்கான வண்ணத்தின் சாரமிக்க வெளிப்பாடு என்பவற்றுடன் நிறைவுற்றது.
அமெரிக்கா முன்வைத்த திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் கட்டமைப்பு வரி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள JAAF
ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் வரி கட்டமைப்பின்படி, இலங்கைக்கு விதிக்கப்பட்ட 20% வரி விகிதம் தொடர்பாக,…