ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா நான்காவது தடவையாக தெரிவு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவாகியுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 64ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் திங்கட்கிழமை (31) நடைபெற்றபோது அடுத்த இரண்டு வருடங்களுக்கு (2025 – 2027) அவர் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

அவரது தெரிவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் குழு உறுதி செய்தது.

அப் பதவிக்கு நான்காவது தடவையாக தெரிவாகியுள்ள ஷம்மி சில்வா, மூன்றாவது தடவையாக போட்டியின்றி தெரிவானது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சமாகும்.