பெலாரஸ் மாணவர்கள் வருடாந்த ஒன்று கூடல் 2025 நிகழ்வில் 200ற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதுடன், இது கல்வியின் சிறப்பு மற்றும் மருத்துவத்தின் எதிர்காலம் என்பவற்றை ஊக்குவிக்கும் வெற்றிகரமான நிகழ்வாக அமைந்தது. சர்வதேச கல்விக்கான பங்குதாரர்களில் புகழ்பெற்ற ISC Educationநிறுவனம், மருத்துவ மாணவர்கள், பட்டதாரி வைத்தியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை ஒன்றிணைக்கும் வகையில் இலங்கையில் உள்ள பெலாரஸ் பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து நான்காவது வருடமாகவும் இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருந்தது.
தற்போதைய மருத்துவ மாணவர்களுக்கும், பட்டதாரி மருத்துவர்களுக்கும் இடையிலான உற்சாகமான கிரிக்கெட் போட்டியுடன் ஆரம்பமாக இந்த மறக்க முடியாத நிகழ்வு, பெலாரஸ் அரச மருத்துவ பல்கலைக்கழகத்தின் (BSMU) பழைய மாணவர்களின் பிணைப்பை வலுப்படுத்தியது. இந்த நாள் பாரம்பரியம்,சாதனை மற்றும் மருத்துவத் தொழிலின் விழுமியங்களை மதிக்கும் ஓர் இனிய மாலை விழாவுடன் முடிவுக்கு வந்தது.
மங்கல விளக்கேற்றலுடன் உத்தியோகபூர்வ மாலை நிகழ்வு ஆரம்பமானதுடன், இதனைத் தொடர்ந்து இலங்கைக்கான பொலாரஸ் அரச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியுமான மருத்துவர் ஹரி பிரசாத் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழ்வில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அத்துடன், ISC Educationநிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.
இந்த இனிய மாலை நிகழ்வின் சிறப்பு அம்சமாக புதிய மருத்துவ மாணவர்களின் வெள்ளை கோட் அணிவிப்பு நிகழ்வு அமைந்தது. அதாவது, மாணவர்கள் எதிர்கால மருத்துவர்களாக மாறுவதைக் குறிக்கும் வகையில் 38முதல் வருட மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை கோட் அணிவிக்கப்பட்டன. வெள்ளை கோட் நம்பிக்கை, குணப்படுத்துதல், நோயாளிகள் மற்றும் சமூகம் தங்களில் வைக்கப்படும் நம்பிக்கையைக் குறிக்கின்றது என்பதை இந்த விழா வலியுறுத்துகிறது.
பெலாரஸ் அரச மருத்துவ பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர்களில் கல்வியில் சிறப்பாக விளங்கியவர்களையும் இந்நிகழ்வு ஊக்கப்படுத்தியது. கல்வியில் சிறப்பாகச் செயற்பட்ட, ஆய்வுகளில் பங்களிப்புச் செலுத்திய பெலாரஸ் அரச மருத்துவ பல்கலைக்கழக 10 மாணவர்களை அங்கீகரித்து புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. இவர்களில் நான்கு மாணவர்கள் தலா 1000 டொலர் பெறுமதியான உயர் சாதனை புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர்.
முதலாம் ஆண்டு மாணவர்களின் கலாசார நிகழ்வுகள், விளையாட்டில் ஏற்படுத்திய சாதனைகளை அங்கீகரித்து கிரிக்கெட் விருதுகள், பெலாரஸ் மருத்துவ மாணவர்கள் இலங்கையில் கொண்டிருக்கும் அனுபவத்தை வரையறுக்கும் சமூக உணர்வை வெளிப்படுத்தும் வகையிலான குழுப் புகைப்படம் என்பவற்றுடன் இனிய மாலை நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.
நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பயணப் பங்காளரான 30 வருட அனுபவத்தைக் கொண்ட IATA அங்கீகாரம் பெற்ற TGL Travels (Pvt) Ltd நிறுவனம் உள்ளிட்ட மூலோபாயப் பங்காளர்கள் இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
பெலாஸர் அரச மருத்துவ பல்லைக்கழகத்தின் அதிபர் பேராசிரியர் ருப்னிகோவிச் செர்ஜி இங்கு உரையாற்றுகையில், “பட்டம்பெற்ற பின்னர் எமது தொடர்புகள் முடிவுக்கு வராமையே பெலாரஸ் அரச மருத்துவ பல்கலைக்கழக குடும்பத்தின் பலமாகும். நட்பு, ஒத்துழைப்பு மற்றும் நீங்கள் கட்டியெழுப்பியுள்ள உணர்வு என்பவையெ உங்களின் வாழ்க்கையில் தொடர்ந்தும் வரும். இவை உங்களைத் தொழில் ரீதியாகவும் முன்னோக்கிக் கொண்டு செல்லும். இந்த சமூக உணர்வுதான் எங்களை ஒரு பல்கலைக்கழகமாக மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு குடும்பமாக ஆக்குகின்றது” என்றார்.
ISC Education நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான இந்துஜா புஷ்பநாதன் குறிப்பிடுகையில், “இந்த ஒன்றுகூடல் புதிய மற்றும் பழைய மருத்துவ மாணவர்கள், பட்டதாரி மருத்துவர்களுக்கிடையே ஆரோக்கியமான பிணைப்பை வலுப்படுத்துவதுடன், புதிய மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுக்குள் அறிமுகமாகிக் கொள்கின்றனர். பொலாரஸ் செல்லவிருக்கும் மாணவர்கள் அங்கு கல்வி கற்கும் மாணவர்களுடன் அறிமுகமாகி அனைவரும் ஒரு நட்பு ரீதியான சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியாக உணர்கிறார்கள்” என்றார்.
2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பெலாரஸ் பட்டதாரிகள் சங்கம் இப்போது உலகெங்கிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பட்டதாரிகளை இணைக்கின்றது. இதன் இலங்கைக் கிளை இந்த சர்வதேச வலையமைப்பின் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் வளர்ந்து வரும் பகுதியைப் பிரதிபலிக்கிறது. பழைய மாணவர் பிணைப்புகளைப் பராமரிப்பது, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியை ஆதரிப்பது, மற்றும் பெலாரஸ் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரத்தை உயர்த்துவது ஆகியவற்றில் இந்தச் சங்கம் கவனம் செலுத்துகின்றது.