SDB வங்கியானது தமிழ்-சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதனது முக்கிய சேமிப்பு பிரச்சாரமான ‘SDBஇதுறும் சரித்ரய’ வின் 2025 ஆண்டிற்கான பதிப்பு வெளியீட்டினை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றது. இத்துவக்கமானது விசுவாசமிக்க மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் என இருவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துஉற்சாகமிகு பரிசுகளுடன் சேமிப்புக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையிலிருக்கும் இப்பிரச்சாரமானது கவர்ச்சிகரமான பரிசுத் திட்டங்களுடன் விசேடமாகவடிவமைக்கப்பட்டுள்ள SDB சேமிப்பு சான்றிதழ்களில் முதலிடுவதற்கான தனித்துவமான வாய்ப்பினைவாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. ரூ. 100, 000 வைப்பிலிடும் வாடிக்கையாளர்கள் நவீனபயணப்பையொன்றையும் ரூ. 250, 000 வைப்பிலிடும் வாடிக்கையாளர்கள் 1.5 லீ ரைஸ் குக்கர் ஒன்றினையும் பரிசாகப்பெறுவர். அதேசமயம், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சங்கங்கள் என்பனவும் பயணப் பை ஒன்றையும் துருப்பிடிக்காததெர்மோஸ் பிளாஸ்க் ஒன்றினையும் முறையே ரூ. 250,000 அல்லது ரூ. 500,000 வைப்புகளுக்கு பெறுகின்றன. இப்பிரச்சாரமானது புதுவருட இதுறும் சரித்ரய (சேமிப்பு) இனை விளம்பரப்படுத்தவும், புதிய சேமிப்புக்களைஊக்குவிக்கவும் வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்தவுமாக நோக்கங்கொண்டுள்ளது. இது அதனது சேமிப்புமையத்தையும் மற்றும் புதிய வாடிக்கையாளர் பிரிவுகளை அடையவுமான SDB வங்கியின் பரந்த பார்வையுடன் தடையறஒருங்கிணைக்கின்றது.
இப்பிரச்சாரம் குறித்து கருத்துரைக்கையில் SDB வங்கியின் சிரேஷ்ட வியாபார அதிகாரி திரு. சித்ரால் டி சில்வாஅவர்கள் ‘SDB வங்கியின் ‘இதுறும் சாரித்ரய’வடன் பாரம்பரியமும் மீளாக்கமும் நிறைந்த இக்காலப்பகுதியில்இலங்கையர்கள் மத்தியில் சேமிப்பின் காலந்தாண்டிய பெறுமதியை விதைக்க நோக்கங்கொண்டுள்ளோம். இத்துவக்கமானது நிதித் திட்டமிடல் மாத்திரமன்றி எமது வாடிக்கையாளர்களது நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்கானஎமது பாராட்டுதல்களின் வெளிப்பாடுமாகும். உற்சாகமிகு ‘இதுறும் சரித்ரயா’ வினை தழுவிக்கொண்டு இத்தமிழ்சிங்களப் புத்தாண்டில் தொடங்கும் உங்களது வாழ்வின் மிகமுக்கிய பாகமான சேமிப்புப் பழக்கத்தினை எம்முடன்இணைந்து மேற்கொள்ள அனைத்து இலங்கையர்களையும் இருகரம் நீட்டி வரவேற்கின்றோம்.’ என்றார்.
கிராமிய சமூகங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கவும் மற்றும் சிறியமற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் சுயதொழில்வாண்மையாளர்களை- பெண்சுயதொழில்வாண்மையாளர்களுக்கான விசேட கவனத்துடன்- வலுவூட்டவும் தெளிவான நோக்கங்கொண்டுள்ளவங்கியொன்றாக – SDB வங்கியானது புத்தாக்கமானதும் உள்ளடக்கமிக்கதுமான நிதிசார் தீர்வுகளை தொடர்ந்தும்வழங்கும். இப்பிரச்சாரத்தினை புதிய ஆரம்பம் மற்றும் செழுமையினைக் குறிக்கும் பருவமொன்றான புதுவருடக்காலத்தில் வெளியிட்டு SDB வங்கியானது அனைத்து இலங்கையர்களுக்கும் வங்கியுடன் பங்குதாரராவதற்கும்இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாக விளங்கும் சிறிய மற்றும் நடுத்தர சுயதொழில்வாண்மைக்குகுறிப்பிடத்தக்களவில் பங்களிப்பதற்குமான வாய்ப்பொன்றினை வழங்குகின்றது.
SDB வங்கி:
வாடிக்கையாளர் மைய மற்றும் ஒவ்வொரு தனிநபரினதும் தேவைகளுக்கென நேர்த்தியாக்கப்பட்ட பொருத்தமானஆதரவிற்கென அர்ப்பணிக்கப்பட்ட, எதிர்காலத்திற்கு தயாரான வங்கியொன்றாக, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின்பிரதான பலகை மற்றும் BB +(lka) பிட்ச் ரேட்டிங்கிலான பட்டியலுடன், இலங்கை மத்திய வங்கியினால்ஒழுங்குப்படுத்தப்படுகின்ற அனுமதிப்பெற்ற விசேடத்துவப்படுத்தப்பட்ட வங்கியொன்றாகும். நாடளாவியரீதியில் 94 கிளைகளின் வலையமைப்பினூடாக, வங்கியானது நாடுமுழுதும் அதனது சில்லறை, சிறிய மற்றும் நடுத்தரதொழில்முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வியாபார வங்கியியல் வாடிக்கையார்களிற்கு நிதிச் சேவைகளின் பொருத்தமானவகைகளை வழங்குகின்றது. நிலைபேறான நடைமுறைகளின் ஊடாக உள்ளுர் சமுதாயங்கள் மற்றும் வியாபாரங்களைஉயர்த்தும் துடிப்பான குவிமையத்துடனான சுற்றுச்சூழல், சமூக, மற்றும் ஆட்சி கோட்பாடுகள் SDB வங்கியின்நெறிமுறைகளில் ஆழப்பதிந்துள்ளன. வங்கியானது இலங்கையை புதிய உயரங்களிற்கு இட்டுச்செல்வதனைநோக்கமாகக்கொண்டு, பெண்களின் வலுப்படுத்தல், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் நிலைபேறானஅபிவிருத்தி மற்றும் எண்ணிய உள்ளடக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.