காப்புறுதி/தரகு கம்பனிகளுக்கு இடையிலான 2025 வினா – விடை போட்டியில் சம்பியனான HNB பொதுக் காப்புறுதி

இலங்கையின் பொதுக் காப்புறுதி துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் HNB General Insurance Limited (HNBGI), இலங்கை காப்புறுதி கல்வி நிறுவகத்தின் (SLII) ஏற்பாட்டில் கடந்த 2025 ஜூன் 06ஆம் திகதி, கொழும்பு Marino Beach Hotel இல் இடம்பெற்ற காப்புறுதி/ தரகு கம்பனிகளுக்கு இடையிலான வினா – விடை போட்டியில் சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.

இந்த கௌரவமிக்க வருடாந்த போட்டியில் முதன்முறையாக வெற்றி பெறுவது HNBGI நிறுவனத்திற்கான ஒரு முக்கிய சாதனையாகும். அறிவையும் தொழில்முறை சிறப்பையும் அடிப்படையாகக் கொண்ட பணிச் சூழலை வளர்க்கும் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது. இந்த வினா – விடை போட்டியில் நாடுமுழுவதும் இருந்து காப்புறுதி மற்றும் தரகு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 24 குழுக்கள் பங்கேற்றன. காப்புறுதி, வரலாறு, புவியியல், விஞ்ஞானம், இலக்கியம், கலை, பொழுதுபோக்கு, IQ, நடப்பு விவகாரங்கள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் தீர்க்கமான அறிவை சோதிக்கும் நிகழ்வாக இந்த போட்டி அமைந்திருந்தது.

HNBGI நிறுவனத்தின் வெற்றி பெற்ற குழுவில் அனூஷிகா விக்ரமசிங்க, இந்திக வீரகோன், சுதாரக ஜயவிக்ரம, ஜனார்த்தனன் தவராஜ், மலிந்த சமரவீர, பிரதீப் கசுன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவினர் சிறந்த ஒருங்கிணைப்புடன், விமர்சன ரீதியான சிந்தனை மற்றும் விடயங்களில் சிறந்த திறன் ஆகியவற்றின் மூலம் நிகழவு முழுவதும் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த வெற்றி தொடர்பில் கருத்துத் தெரிவித்த HNBGI நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சித்துமின ஜயசுந்தர, “இந்த அற்புதமான வெற்றியை பெற்றமைக்காக எமது பிரகாசமிக்க குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். HNBGI ஆகிய நாம் அறிவு, வளர்ச்சி, விசேடத்தும் ஆகியவற்றின் கலாசாரத்தை நாம் மேம்படுத்தி வருவதை இது பிரதிபலிக்கிறது. எமது குழுவினர் கொண்டுள்ள உண்மையான தொழில்முறைத் திறனை இது காட்டுகின்றது என்பது பெருமையளிக்கிறது. இப்போட்டியில் மட்டுமல்லாது, தினமும் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையளிக்கும்போதும் இது வெளிப்படுத்தப்படுகின்றது.” என்றார்.

HNBGI நிறுவனம் அனைத்துப் பிரிவுகளிலும் கொண்டுள்ள திறமைகளும், விசேடத்துவமும் இந்த வெற்றி மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது. காப்புறுதித் தொழில்துறையில் அறிவு, திறன் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

இப்போட்டியை ஏற்பாடு செய்த இலங்கை காப்புறுதி கல்வி நிறுவகம் (SLII), நாட்டின் காப்புறுதி கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகவும், கைத்தொழில்துறை தரங்களை உயர்த்தும் பலதரப்பட்ட முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. காப்புறுதி/தரகு நிறுவனங்களுக்கு இடையேயான வினா விடை போட்டி போன்ற முயற்சிகள், தொழில்துறை தரங்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிகழ்வு தொழில்துறை சகாக்களிடையே தொழில்முறை ரீதியான நட்புறவு, அறிவுப் பகிர்வு மற்றும் ஆரோக்கியமான போட்டியை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய தளமாக அமைந்துள்ளது.

HNB பொதுக் காப்புறுதி (HNBGI) நிறுவனம் இலங்கையில் வாகனம், மருத்துவம், வீடு, தீ, கடல் மற்றும் பயணக் காப்புறுதி உள்ளிட்ட பொதுக் காப்புறுதி தீர்வுகளை வழங்கும் ஒரு நம்பிக்கைக்குரிய நிறுவனம் ஆகும். HNB Assurance PLC நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாகவும், HNB குழுமத்தின் ஒரு அங்கமாக வகிக்கும் HNBGI நிறுவனம், நாடு முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு பாதுகாப்பு மற்றும் மன அமைதியை வழங்கி, இலங்கையில் மிகவும் வாடிக்கையாளர்களை மையமாக செயற்படும் காப்புறுதி நிறுவனமாக மாறுவதை தனது நீண்டகால தூரநோக்காகக் கொண்டு செயற்பட உறுதி பூண்டுள்ளது.