ஐக்கிய இராச்சியத்தின் College of Contract Management நிறுவனம் இலங்கை மாணவர்களுக்கு இலவச பிரித்தானிய தகவல் தொழில்நுட்ப டிப்ளோமாவை வழங்குகின்றது 

ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட தொழில்சார் கல்லூரியான College of Contract Management நிறுவனம் ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் ஏனைய நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு மட்டம் 3 முதல் மட்டம் 7 வரையான ( டிப்ளோமா முதல் முதுமானிவரை) கற்கைநெறிகளை வழங்குகின்றது. இந்தக் கல்லூரி இலவச தகவல் தொழில்நுட்ப அடிப்படை டிப்ளோமா கற்கையை வழங்கும் சமூகப் பொறுப்பு முயற்சியொன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. எந்தவொரு உரிமைபெற்ற பங்காளர்களும் இன்றி நேரடியாகவே பிரித்தானியக் கல்வித் தகுதியை இலங்கை மாணவர்கள் முற்றிலும் இவசமாகப் பெற்றுக்கொள்ள இதன்மூலம் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.

நிஜஉலக வேலைவாய்ப்புக்குத் தேவையான நடைமுறை ரீதியான திறன்களை வழங்கத் பாரம்பரிய கற்கை நெறிகளிலிருந்து இந்தக் கற்கைநெறியின் தகுதி  வேறுபட்டு நிற்கின்றது.

College of Contract Management நிறுவனத்தின் பெரும்பாலான மாணவர்கள் உலகளாவிய ரீதியில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் இளமானி அல்லது முதுமானிப் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இருந்தபோதும், போட்டித் தன்மையை உருவாக்குதல், பணியாற்றும் துறைசார் நிபுணர்களின் திறனை உயர்ந்த மட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையிலும் இந்தத் தொழில்முறை டிப்ளோமா கற்கைநெறிகள் வடிவமைக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் தமது மேலதிகமான கல்விக்காக இந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக அமைகின்றது.

தமது பணிகளில் சிறப்பாகச் செயற்படக்கூடிய உயர் திறன்கொண்ட துறைசார் நிபுணர்களை உருவாக்கி, கட்டுமானம்,பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகம் போன்ற துறைகளில் இந்தக் கல்லூரி கணிசமான பங்களிப்பைச் செய்துவருகின்றது. ஐக்கிய இராச்சியத்தின் சரே பிரதேசத்தில் கல்லூரியின் தலைமையகம் அமைந்திருந்தாலும்,பல்வேறு நாடுகளில் தனது அலுவலகங்களைச் செயற்படுத்தி வருகின்றது. இவ்வாறு வெற்றிகரமாக இயங்கிவரும் அலுவலகங்களில் ஒன்றாக இலங்கையின் கொழும்பு 03ல் அமைந்துள்ள அலுவலகம் காணப்படுவதுடன், இது பல வருடங்களாகச் செயற்பட்டு வருகின்றது.

இலங்கையின் தொழில் வல்லுனர்கள் புத்திசாலியானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் உயர்ந்த அர்ப்பணிப்புக் கொண்டவர்கள் என்பதை கல்லூரி தொடர்ச்சியாகக் கண்டறிந்தது. இந்த சாதகமான சூழ்நிலை காரணமாக தொழில்நுட்பம் சார்ந்த தொழில்வல்லுனர்களை இலங்கையிலிருந்து பணிக்கு அமர்த்துக்கொள்ள அவர்களைக் தூண்டியது. பல வருடங்களாக வாராந்த நேர்முகப் பரீட்சைகளை நடத்தியிருந்தாலும், உள்நாட்டு வேலைச் சந்தைக்கு நடைமுறைத் திறன்கொண்ட போதுமான விண்ணப்பதாரிகள் குறைவாக இருப்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். 

கொழும்பில் தாம் வாரந்தோறும் 50 ற்கும் அதிகமான வேலைவாய்ப்பு தேடுபவர்களை சந்தித்தாலும், தொழில் சந்தையில் பல வேலைவாய்ப்புக்கான அறிவிப்புக்களைப் பார்த்தாலும் பெரும்பாலான விண்ணப்பதாரிகளின் கல்வித் தகைமைகள் தொழில்துறையின் தேவைகளுடன் பொருந்தவில்லையென்பதை அறிந்துகொண்டதாக தலையகத்தில் பணியாற்றும் ஆட்சேர்ப்புப் பிரிவின் தலைவர் திருமதி. எலிஸ் டி கார்டரேட் தெரிவித்தார்.

இதன் பலனாக இலங்கை மாணவர்கள் நிஜஉலகத்திற்குத் தேவையான திறன்களைக் கட்டியெழுப்புவதற்காக தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா கற்கைநெறியை இலவசமாகத் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்க கல்லூரியின் உயர் முகாமைத்துவம் தீர்மானித்தது. கல்விசார் கற்ககைநெறிகள் போல் அல்லாது இந்தக் கற்கைநெறி தொழில்துறை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், நிஜஉலக உதாரணங்கள், ஆய்வுகூட அமர்வுகள், தொழில்துறையை நோக்காகக் கொண்ட நேர்வு ஆய்வுகள், இறுதி அறிக்கை போன்றவற்றைப் பயன்படுத்தி அனுபவம்பெற்ற துறைசார் வல்லுனர்களால் இது முன்னெடுக்கப்படும். 

கற்கைநெறியின் ஒவ்வொரு தொகுதியின் முடிவிலும், மாணவர்கள் நிஜ உலகச் சூழ்நிலைகளை முழுமையாக அடிப்படையாகக் கொண்ட பணிகளை முடிப்பார்கள், இது அவர்களுக்கு நடைமுறை அனுபவத்தைப் பெறவும், உடனடியான வேலைக்கு அவர்களைத் தயார்ப்படுத்தவும் உதவியாக இருக்கும். வேலைக்குத் தேவையான திறன்களை வளர்ப்பதில் பாடத்திட்டம் கவனம் செலுத்துவதுடன், பட்டதாரிகள் தொழில் சந்தையில் நுழைவதற்கு அல்லது நம்பிக்கையுடன் அதற்கான மேலதிக படிப்பை முன்னெடுப்பதற்கு அவர்களைத் தயார்படுத்துகின்றது.

உள்நாட்டு சந்தையுடன் ஒப்பிடுகையில் குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட விரிவுரையாளர்கள் மற்றும் செயற்பாட்டுச் செலவுகளுடன் அவர்களின் பாடநெறிகளுக்கான செலவு அதிகமாக இருந்தாலும், தகவல் தொழில்நுட்ப அடிப்படை டிப்ளோமாவை எந்தவித செலவும் இன்றி இலங்கை மாணவர்களுக்கு வழங்குவதில் கல்லூரி உறுதியாக உள்ளது.

தமது செயற்பாடுகளைக் கொழும்பில் முன்னெடுப்பதற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொழில்வல்லுனர்களைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டதுடன், தொழில்துறையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் கல்விசார் கற்கைகள் இல்லையென்பதையும் அங்கீகரித்தனர். இதுபோன்று உரிய தொடர்புகள் இன்மையால் LinkedIn மற்றும் TopJobs போன்ற தளங்களில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றபோதும் வேலைதேடும் பலர் இன்னமும் தொழில் இன்றிக் காணப்படுகின்றனர். 

2024ஆம் ஆண்டில் இலங்கையின் கல்வித்துறை தொடர்பான  அவர்களின் ஆய்வின் அடிப்படையில், பாடசாலையிலிருந்து வெளியேறும் 333,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்திருப்பதுடன், 150,000  மாணவர்களே உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சிபெற்று தகுதி பெறுகின்றனர். இதில் 41,000 மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைக்கின்றது. ஏறத்தாழ 50,000 தகுதிபெற்ற மாணவர்கள் உயர் கல்விக்கான அணுகல் இன்றி இருக்கின்றனர். இதில் நிதிக் கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் மாணவர்கள் மத்திய கிழக்கு மற்றும் தொலைகிழக்கு நாடுகளில் குறைந்த திறன்களைக் கொண்ட வேலைவாய்ப்புக்களுக்குச் செல்வதற்குப் பதிலாக இந்த வாய்ப்பானது மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் தமது தொழில்வாய்ப்பை ஏற்படுத்த உதவியாக இருக்கும் எனக் கல்லூரி நம்புகின்றது. மேலும், இந்த முயற்சி நாட்டில் ஒரு முக்கியமான திறன் மூலதனத்தை உருவாக்க உதவுகிறது, இது தொடர்ந்து இலங்கை தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மேலும் வேலைவாய்ப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளது.

மேலும், இந்த முயற்சி நாட்டில் ஒரு முக்கியமான திறன் சார்ந்த மூலதனத்தை உருவாக்க உதவுகிறது, இது தொடர்ந்து இலங்கை தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மேலும் வேலைவாய்ப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளது.

தமது அனுபவத்திற்கு அமைய ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் அலுவலகமொன்றை அமைத்து அதன் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது மிகவும் சுமுகமானது என இந்தக் கல்லூரியின் அதிபர் கருத்துத் தெரிவித்தார். இதன் மூலம் இலங்கை பெரிய நிறுவனங்களுக்கான செயற்படக் கூடிய இடமாக அமையும் என்பதுடன், இதன் மூலம் வெளிநாட்டு நாணய வரவு அதிகரித்து, உள்நாட்டு வணிகத் துறைகளின் கோரிக்கைகளை மேம்படுத்தவும், சம்பந்தப்பட்ட துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கவும் வாய்ப்பு உருவாகும். 

டிஜிட்டல் துறையின் ஊடாக பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதில் புதிய அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டைக் காண்பித்திருப்பதாக கொழும்பு அலுவலகத்தின் இணைந்த பணிப்பாளர் திரு.ஜனித் சசிந்த தெரிவித்தார். இருந்தபோதும், இந்த வளர்ச்சிக்குத் திறமையான இளையோரை உருவாக்குவது முக்கியமான ஒத்துழைப்பாக அமையும். கல்வி நிறுவனங்கள் இதில் முக்கிய பங்கை வகித்தாலும், அவற்றின் பட்டதாரிகள் தொழில்துறைக்குத் தயாரானவர்களாக மாறுவதற்கு காலம் எடுக்கும் என்பதுடன், நிஜஉலக அனுபவம் இன்மையால் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் பலர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடைமுறை ரீதியான அணுகுமுறையாக College of Contract Management கல்லூரி நேர்வு ஆய்வுகள் மற்றும் நிஜ உலக திட்டங்களின் ஊடாக இந்தக் கற்கை நெறியை முன்கொண்டு செல்கின்றது. பதின்மூன்று வருடங்களுக்கு மேலான உலகளாவிய அனுபவத்தின் மூலம், தொழில்துறையுடன் தொடர்புபட்ட கற்கை நெறிகளை வழங்கி அதன் ஊடாக மாணவர்களை வெற்றிக்காகத் தயார்ப்படுத்துவதில் கல்லூரி நற்பெயரைப் பெற்றுள்ளது.

வழிகாட்டிகளாகச் செயற்படக்கூடிய அனுபவம் வாய்ந்த துறைசார் நிபுணர்கள் இந்தக் கற்கைநெறியைக் கற்பிப்பதுடன், அவர்கள் அனுபவம் வாய்ந்த வழிகாட்டல்கள் மற்றும் தொழில்வாய்ப்புக்கான விபரங்களை வழங்குவார்கள். இந்த முயற்சியானது மாணவர்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் உதவிசெய்வதற்கும் அப்பால் சென்று, இலங்கையின் பரந்துபட்ட பொருளாதார மாற்றத்திற்கும் பங்களிப்புச் செலுத்துகின்றது. டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்ற பணியாளர் சக்தியை உருவாக்குவதுடன், தேசிய ரீதியான போட்டித் தன்மை மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கும் இந்தக் கற்கைநெறி உதவியாக அமையும்.

பட்டதாரிகள் வேலைக்குத் தம்மைத் தயார்ப்படுத்தும் நடைமுறைத் திறன்களைப் பெறுவது மட்டுமல்லாமல், தன்னம்பிக்கையையும் பரந்த தொழில் வாய்ப்புகளுக்கான அணுகலையும் பெறுவார்கள். நடைமுறைமிக்க அணுகுமுறை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பாளர்கள் நாடும் திறன்களை பெற்றுக் கொண்டே பட்டம் பெறுவதை உறுதிப்படுத்துகிறது.

இலங்கை மற்றும் தனது அலுவலகங்களைக் கொண்டுள்ள பிற நாடுகளிலும் இந்த இலவச தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை நெறியை செயற்படுத்துவதற்கு கல்லூரி மிகவும் பெரிய நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் முழு நேர விரிவுரையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆய்வுகூட அணுகல் போன்ற வசதிகளும் கிடைக்கும்.

இது ஒரு சமூகப் பொறுப்பு முயற்சி என்பதுடன், வர்த்தக ரீதியான விஸ்தரிப்பு அல்ல. முழுமையாக நிதியளிக்கப்பட்ட திட்டமாக, இது திறமையான மாணவர்களுக்கு நிதி தொடர்பான தடைகளை அகற்றுவதுடன், உலகளாவிய கல்வி வழங்குநர்கள் அறிவு மற்றும் திறன்கள் பகிர்வின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு சாத்தியமான பங்களிப்பு செய்யும் விதத்தை வெளிப்படுத்துகிறது.

தகவல் தொழில்நுட்ப அடிப்படை டிப்ளோமா கற்கைநெறியில் ஆர்வமுள்ள இலங்கை மாணவர்கள் www.uniccm.comஎன்ற இணையத்தள இணைப்பின் ஊடாக அல்லது கல்லூரியின் உத்தியோபூர்வ சமூக ஊடகங்களின் ஊடாகப் பதிவை மேற்கொள்ள முடியும். பதிவுச் செயன்முறை எளிமையானது என்பதுடன், அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. நிதி அல்லது நிர்வாகக் கட்டுப்பாடுகள் காரணமாக எந்தத் தகுதியுள்ள மாணவரும் விலக்கப்படவில்லை என்பதை உறுதி செய்கிறது.

Uni CCM தொடர்பிலும், தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை நெறி தொடர்பிலும் மேலதிக தகவல்களைப் பெற தொடர்புகொள்ளவும்: +94 77 907 7300