உணர்வு, உருவம் மற்றும் வடிவமைப்பின் எதிர்காலத்தை வெளிப்படுத்தி இலங்கையில் கலர்நெக்ஸ்ட் 2025இனை வெளியிட்ட ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே

கொழும்பு இம்பீரியல் மோனார்க்கில் அற்புதமான ஒரு மாலையில், ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது அதனது முக்கியநிகழ்வான, கலர்நெக்ஸ்ட் 2025 இன் இரண்டாம் பதிப்பினை நடாத்தியது. வர்ணம் மற்றும் உருவ நுண்ணறிவிற்கெனநம்பகமான மேடையாக தென்னாசியா முழுதும் அறியப்பட்டுள்ள, கலர்நெக்ஸ்டானது உலகளாவிய வடிவமைப்புஎதிர்வுகூறலுடன் உணர்வுகளின் ஒத்திசைவினை ஒருங்கிணையச் செய்து அபரிதமாக ஆய்வுசெய்யப்பட்ட வருடாந்தஎதிர்வுகூறலினை வெளிப்படுத்தியது. 

ஏசியன் பெயிண்ட்ஸின் நவீனமயமான R&D தகவுகள் மற்றும் சர்வதேச வடிவமைப்பு உயிர்வகைமை என்பவற்றின் ஆதரவுடன்,கலர்நெக்ஸ்ட் என்பது வெறுமனே ஒரு எதிர்வுகூறலாக அன்றி – அறியப்பட்டு பகிரப்பட்ட புதிதாக தோற்றம்பெற்றுவரும்வண்ணங்களின் உணர்வுகள், பொருள்சார் புத்தாக்கங்கள் மற்றும் வடிவமைப்பு மாற்றங்கள் என்பவற்றை ஊடுகாட்டும்கண்ணாடியாகவும் காணப்படுகின்றது.  யதார்த்த உலகத்தின் உள்முகத் தோற்றங்களை வடிவமைப்பு பாஷைகளில்மொழிபெயர்க்க இணைந்து பணியாற்றும் சமூகவியலாளர்கள், கட்டிட கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள்பங்கேற்ற வருடக்கணக்கான நீண்ட செயன்முறையிலிருந்து இவ்வருடாந்த புத்தாக்கமானது வகுக்கப்பெறுகின்றது. இதுகலர்நெக்ஸ்ட்டினை நிகழ்கால போக்குகளை எதிர்வுகூறுவதற்கு மாத்திரமின்றி அவற்றை வடிவமைப்பதற்குமாகஇத்தொழிற்றுறைக்கான சக்திவாய்ந்த கருவியாக்குகின்றது. 

2025 ஆம் ஆண்டிற்கான வண்ணமாக இவ்வருடத்தின் எதிர்வுகூறலில் ஒண்சிவப்பு நிறம் (கார்டினல்) மகுடம் சூடியது. ஆத்மார்த்தமான, கருஞ்சிவப்பான, ஒண்சிவப்பு நிறமானது அதீத செறிவினை – ஆழமானதும் உணர்வுபூர்வமானதுமாகஉள்ளடக்கியுள்ளது. இது ஒரு ஏக்கம் மற்றும் அகப்புறநோக்கம் முதல் நெகிழ்வுத்தன்மை மற்றும் புத்தாக்கம் வரையில், மனிதஉணர்வுகளின் ஆழத்தினையும் நுணுக்கங்களையும் பேசுகின்றது. கட்டிட வடிவமைப்பு, உட்புற வடிவமைப்போ அல்லதுதனிப்பட்ட உணர்வு வெளிப்பாடோ, கார்டினலானது உணர்வு மற்றும் உரையாடலுக்கான வெளியாக வண்ணத்துடன்பங்கேற்பதற்கு வடிவமைப்பாளர்களை வரவேற்கின்றது. 

இந்நிகழ்வில் உரையாற்றுகையில், ஏசியன் பெயிண்ட்ஸ் இன்டர்நேஷனல் பிரைவெட் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்றுஅதிகாரி, திரு.ஜோசப் ஏபன், அவர்கள் ஆய்வு மைய புத்தாக்கம் மற்றும் பிராந்திய ஒருங்கிணைவுகளுக்கான வர்த்தக நாமத்தின்அர்ப்பணிப்பினை மீளவலியுறுத்தினார். ஏசியன் பெயிண்ட்ஸின் பிராந்திய தலைவர், திருபுத்தாதிடியா முகர்ஜி, ஏசியன்பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் இலங்கைக்கான தலைவர், திருவைத்தியலிங்கம் கிரிதரன், மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ்கோஸ்வேயின் இலங்கைக்கான சந்தைப்படுத்தல் தலைவர், திருஅனுராதா எதிரிசிங்க ஆகியோரது பிரதம உரைகளுடன்கட்டிடக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரின் அதிமுக்கிய ஒன்றுகூடலையும் அம்மாலைஅலங்கரித்திருந்தது. 

கலர்நெக்ஸ்ட்டின் பிராந்திய சிறப்பம்சம்  குறித்து கருத்துரைக்கையில், திருமுகர்ஜி அவர்கள், “கலர்நெக்ஸ்ட்டானதுவடிவமைப்பு நுண்ணறிவு மற்றும் சந்தை எதிர்வுகூறலின் உச்சகட்டமாகும். எமக்கு, இது வெறுமனே ஒரு வண்ணத்தகடு அல்ல – வடிவமைப்பினில் செல்வாக்கு செலுத்தும் உணர்வுகள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களினை எதிர்பார்க்கும்தொழில்முறையாளர்களுக்கு நாம் உதவக்கூடிய ஊடுகாட்டும் கண்ணாடியாகும். அடையாளம் மற்றும் காலநிலையுடன்கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு என்பன ஆழமாக பிணைப்புற்றுள்ள இலங்கையில், கலர்நெக்ஸ்ட்டானதுவழிகாட்டியாக – உள்ளுர் உணர்வெழுச்சிகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளையில் நவீன வாழ்வியலை எமது பங்குதாரர்கள்வடிவமைக்க உதவுமொன்றாகியுள்ளது. உலக வடிவமைப்பு கருத்தாக்கங்களில் இலங்கையும் ஒரு பங்காளராக விளங்குவதனைஇது உறுதிப்படுத்தியுள்ளது.”’ என்றார்.

ஒண்சிவப்பு நிறத்தின் (கார்டினல்) அறிமுகத்துடன், 2025 ஆம் ஆண்டுக்கான எதிர்வுகூறலானது இத்துறையின் புத்தாக்கதொழில்முறையாளர்களுக்காக புதிய பொருட்சார் வண்ணப்பேழைகள் மற்றும் கதைகூறும் கருவிகளை வழங்கி – உணர்வுப்பூர்வமான ஆழம், இயற்கையின் மூலக்கூற்று பலம், கலாச்சார நம்பிக்கை, மற்றும் அதியுச்ச எதிர்குரல் என்பவற்றைவெளிப்படுத்தும் நான்கு மிகமுக்கிய போக்குகளின் பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அம்மாலைநேர நிகழ்வானது, உலக எண்ணப்போக்குகள் மற்றும் இலங்கையின் வடிவமைப்பு ஆர்வங்களுக்கு இடையிலானபாலமொன்றாக ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் வகிபாகத்தினை மீளவலியுறுத்தி நவீனகால போக்குகளின் நிறுவல்களதுஅனுபவபூர்வமான பயணம் மற்றும் ஆண்டுக்கான வண்ணத்தின் சாரமிக்க வெளிப்பாடு என்பவற்றுடன் நிறைவுற்றது.